முருகதாஸ் படத்தில் ரஜினி போலீசா?: அப்படின்னா 'அந்த ராசி' ஒர்க்அவுட்டாகிடும்
சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி காவல் துறை அதிகாரியாக நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து அவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
அந்த படம் குறித்து அவ்வப்போது ஏதாவது பேச்சு கிளம்புகிறது.

ரஜினிகாந்த்
முருகதாஸ் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. முன்னதாக அவர் மூன்று முகம், பாண்டியன், கொடி பறக்குது ஆகிய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக மூன்று முகத்தில் வந்த அலெக்ஸ் பாண்டியனை மறக்கத் தான் முடியுமா?

ஹிட்
ரஜினிக்கும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திற்கும் ஒரு ராசி உண்டு. அவர் போலீஸ் அதிகாரியாக நடித்த படங்கள் எல்லாம் ஹிட்டாகியுள்ளன. இந்நிலையில் அவர் முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார் என்றால் அதுவும் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்பப்படுகிறது.

நாற்காலி
ரஜினி, முருகதாஸ் சேரும் படம் அரசியல் பற்றியது அதற்கு நாற்காலி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகின. ஆனால் தனது படத்தின் தலைப்பு நாற்காலி இல்லை என்று முருகதாஸ் ட்விட்டரில் தெரிவித்தார். இது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாம்.

ஹீரோயின்
முருகதாஸ் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. படத்தில் மேலும் யார், யார் நடிக்கிறார்கள் என்ற விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications











