அஜித்தை அடுத்து ரஜினியை இயக்கும் ஹெச். வினோத்?: அப்போ கட்சி...
Recommended Video

சென்னை: ரஜினிகாந்த் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.
பேட்ட படத்தை அடுத்து ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த படத்தை அடுத்து அவர் மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது.
பேட்ட படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பை பார்த்து கார்த்திக் சுப்புராஜுடன் மீண்டும் படம் பண்ண விரும்புகிறார் ரஜினிகாந்த்.

ராஜமவுலி
கார்த்திக் சுப்புராஜ் ஏற்கனவே வெயிட்டிங்கில் இருக்க தற்போது வினோத்தும் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளார். இது தவிர ரஜினிகாந்த் எஸ்.எஸ். ராஜமவுலியின் படத்தில் நடிப்பார் என்றும் தகவல் வெளியாகின. ஆனால் ராஜமவுலி ஆர். ஆர். ஆர். படத்தில் பிசியாக உள்ளார்.

கட்சி
நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் எல்லாம் எனக்கு முக்கியம் இல்லை நேராக தமிழக சட்டசபை தேர்தலில் தான் போட்டியிடுவேன் என்று ஒரு முடிவோடு உள்ளார் ரஜினிகாந்த். அவர் எப்பொழுது கட்சி துவங்குவார் என்ற எதிர்பார்ப்பில் அவரின் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் அவர் தொடர்ந்து புதுப் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டு வருகிறார்.

விமர்சனம்
ரஜினி அரசியலுக்கு வருவார் ஆனால் வரவே மாட்டார். அவர் வராமல் இருப்பது தான் அவருக்கு நல்லது என்று விமர்சிக்கத் துவங்கிவிட்டனர். ஆனால் அனைத்தையும் கேட்டுக் கொண்டு ரஜினி வழக்கம் போன்று அமைதியாக உள்ளார். எங்கள் தலைவர் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவார் என்று அவரின் ரசிகர்கள் நம்புகிறார்கள்.

மக்கள் சேவை
படங்களில் நடித்துக் கொண்டே அரசியல் பண்ணலாம் என்று ரஜினி முடிவு செய்திருக்கிறார் போன்று. அதனால் தான் புதுப்படங்களில் நடிக்க ஒப்புக் கொள்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











