கொரோனா இல்லை.. ரத்த அழுத்தத்தில் மாறுபாடு.. நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி!

By

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத் மருத்துவமனையில் இன்று திடீர் என்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Recommended Video

Rajinikanth Hyderabad மருத்துவமனையில் அனுமதி | Breaking!

நடிகர் ரஜினிகாந்த் இப்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 168 வது படம்.

இதில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உட்பட பலர் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கிறார்.

கொரோனா பரவல்

கொரோனா பரவல்

சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படத்தின் 2 ஆம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவடைந்து விட்டது. மார்ச் மாதம் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட இருந்த நிலையில், கொரோனா பரவல் தீவிரமடைந்தது. இதனால், நாடு முழுவதும் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது.

அரசியலில் ஈடுபட

அரசியலில் ஈடுபட

இதன் படப்பிடிப்பை கொரோனா பரவலுக்கு முன்பே தொடங்கி 40 சதவீதம் முடித்து விட்டனர். அடுத்த மாதம் தனி கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் தயாராகி வருவதால் அதற்கு முன்பாக தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடித்து விடும்படி படக்குழுவினரிடம் அறிவுறுத்தி இருந்தார்.

படப்பிடிப்பில் பங்கேற்பு

படப்பிடிப்பில் பங்கேற்பு

இதையடுத்து 9 மாதங்களுக்கு பிறகு கடந்த 14- ஆம் தேதி ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினர். இதில் ரஜினிகாந்த் பங்கேற்று நடித்து வந்தார். சில தினங்களுக்கு பிறகு நயன்தாராவும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ரஜினி, நயன்தாரா இணைந்து நடித்த காட்சிகளை படமாக்கினர்.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

ஆனால் எதிர்பாராத விதமாக படப்பிடிப்பில் பங்கேற்ற 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர் ரஜினிகாந்துக்கும், மற்ற படக்குழுவினருக்கும் பரிசோதனையில் தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. இருந்தாலும் ரஜினிகாந்த், தன்னை ஐதராபாத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

மருத்துவமனை

மருத்துவமனை

இந்நிலையில் அவர் இன்று ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா இல்லை என்றாலும் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருப்பதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிரச்னை இல்லை

பிரச்னை இல்லை

அவர் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதாகவும் அவருக்கு மற்ற எந்த பிரச்னையும் இல்லை என்று மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X