அச்சச்சோ ரஜினிகாந்த்துக்கு என்னாச்சு?.. மருத்துவமனையில் திடீர் அனுமதி.. எப்போ டிஸ்சார்ஜ் தெரியுமா?

சென்னை: ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அக்டோபர் 10ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது. வேட்டையனை முடித்திருக்கும் அவர் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். தனது கரியரில் இந்த இரண்டு படங்களுமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆகும் என்ற உச்சக்கட்ட நம்பிக்கையில் இருக்கிறார் அவர். இந்தச் சூழலில் திடீரென அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர், லால் சலாம் ஆகிய இரண்டு படங்களில் ஜெயிலரில் ஹீரோவாகவும்; லால் சலாமில் கெஸ்ட் ரோலிலும் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களில் ஜெயிலர் மெகா ஹிட்டானது. ஆனால் மகள் இயக்கத்தில் அவர் நடித்த லால் சலாம் ஃப்ளாப் ஆனது. இருந்தாலும் ஜெயிலர் படத்தின் வெற்றி ரஜினிக்கு உற்சாகத்தையே கொடுத்தது. ஏனெனில் அதற்கு முன்னர் வெளியான அண்ணாத்த, தர்பார் உள்ளிட்ட படங்கள் படுதோல்வியை சந்தித்திருந்தன.

rajinikanth vettaiyan coolie

வேட்டையன் பராக்: ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் ரஜினி. இதில் அவருடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார். முதன்முறையாக ஞானவேலுவுடன் ரஜினிகாந்த் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சக்கட்டமாக இருக்கிறது.

நாளை ட்ரெய்லர்: படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் நடந்து முடிந்தது. அப்போது படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி டீசர் இல்லை; வழக்கமான கமர்ஷியல் படம் மாதிரிதான் இருக்கிறது. முக்கியமாக ரஜினியின் கெட்டப், மேனரிசம் என அனைத்துமே ஜெயிலர் படத்தை நினைவுப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்தன. மேலும் அமிதாப் பச்சனுக்கு பிரகாஷ் ராஜ் குரல் கொடுத்திருந்தார். அதுவும் வரவேற்பை பெறாத சூழலில் ஏஐ மூலம் அமிதாப்பின் குரலை கொண்டுவந்தார்கள். சூழல் இப்படி இருக்க நாளை ட்ரெய்லர் ரிலீஸாகவிருக்கிறது. இதனை ரசிகர்களுக்கு பிடிக்க செய்திட வேண்டும் என்று ஞானவேல் ட்ரெய்லரை பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார்.

மருத்துவமனையில் அனுமதி: இந்நிலையில் ரஜினிகாந்த் திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார். வயிறு தொடர்பான பிரச்னைக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும்; அங்கு அவருக்கு சில பரிசோதனைகள் செய்யப்படவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் ரஜினியின் உடல்நிலை சீராக இருக்கிறது என்றும்; யாரும் பயப்பட தேவையில்லை என்றும் மருத்துவமனை நிர்வாகமும் அறிவித்திருக்கிறது. திடீரென அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் ரசிகர்கள் கொஞ்சம் அச்சத்துடனேயே இருக்கிறார்கள்.

கூலி: முன்னதாக, வேட்டையன் படத்தை முடித்திருக்கும் ரஜினிகாந்த் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். இதில் நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் என பலர் நடிக்கிறார்கள். கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக லோகேஷ் இப்போது திகழ்ந்துவருகிறார். கமலுக்கு எப்படி தரமான படமாக விக்ரமை கொடுத்தாரோ அதேபோல் கூலி படத்தை ரஜினிகாந்த்துக்கு கொடுக்க வேண்டும் என்ற முழு முனைப்போடு உழைத்துவருகிறார் லோகி. மருத்துவமனையிலிருந்து விரைவில் டிஸ்சார்ஜ் ஆகவிருக்கும் ரஜினி சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் கூலி ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என்று தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X