ராணா படம் குறித்து மீண்டும் பேசிய ரஜினி... இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் என்ன சொன்னார் தெரியுமா!

சென்னை : தமிழ் சினிமாவிற்கு பல வெள்ளிவிழா படங்களை கொடுத்தவர் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்

இயக்குனராக பல வெற்றி படங்களை கொடுத்த இவர் இப்பொழுது நடிகராகவும் கலக்கி கொண்டுள்ளார்

கேஎஸ் ரவிக்குமார் ரஜினிகாந்த் மீண்டும் இணைந்த ராணா திரைப்படம் டிராப் ஆகி நீண்ட வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் ரஜினி ராணா கதையை திரும்ப சொல்ல சொல்லி கேட்டு பிரமித்துப் போனார் என தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் கேஎஸ் ரவிக்குமார் பகிர்ந்துள்ளார்.

எண்ணற்ற வெள்ளி விழா படங்களை

எண்ணற்ற வெள்ளி விழா படங்களை

நாட்டாமை,நட்புக்காக,முத்து, படையப்பா, அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம், தசாவதாரம் என எண்ணற்ற வெள்ளி விழாப் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார். ரஜினி கமல் அஜித் விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ள இவர் ரஜினியுடன் இணைந்து முத்து, படையப்பா, லிங்கா உள்ளிட்ட படங்களில் படங்களை இயக்கியுள்ளார்.

அதிநவீன தொழில்நுட்பத்துடன் சரித்திர பின்னணியில்

அதிநவீன தொழில்நுட்பத்துடன் சரித்திர பின்னணியில்

இதில் முத்து மற்றும் படையப்பா இன்று வரை தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக சரித்திரம் படைத்துள்ளது. ரஜினி கேஎஸ் ரவிக்குமார் கூட்டணியில் மேலும் சில படங்கள் உருவாக இருந்து டிராப் ஆனது. அதில் முக்கிய திரைப்படம் ராணா . அதிநவீன தொழில்நுட்பத்துடன் சரித்திர பின்னணியில் மிக பிரம்மாண்டமாக உருவாக இருந்த இந்த படம் பூஜை எல்லாம் போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

ராணா மிக பிரம்மாண்டமாக

ராணா மிக பிரம்மாண்டமாக

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். மிக பிரம்மாண்ட பொருட்செலவில் பான் இந்தியா படமாக உருவாக இருந்த இந்த படம் திடீரென ரஜினிகாந்துக்கு ஏற்பட்ட உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் நின்று போனது.. பல வருடங்கள் ஆகியும் ராணா திரைப்படம் இன்று வரை உருவாகவில்லை. இதற்கிடையில் ரஜினிகாந்த் கேஎஸ் ரவிக்குமார் கூட்டணியில் ஜக்குபாய் என்ற படமும் உருவாகயிருந்தது.

மீண்டும் ராணா கதையைக் கேட்டார்

மீண்டும் ராணா கதையைக் கேட்டார்

கேஎஸ் ரவிக்குமார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்க தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய கேஎஸ் ரவிக்குமார் சுவாரசிய தகவல் ஒன்றை அதில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ரஜினிகாந்த் கேஎஸ் ரவிக்குமாரை அழைத்து பேசியுள்ளார். அப்போது திடீரென ராணா படம் குறித்து பேசிக்கொண்டிருந்த ரஜினிகாந்த் அந்த படத்தின் கதையை மீண்டும் ஒரு முறை சொல்ல முடியுமா எனக் கேட்டுள்ளார். கதையை கேட்டபின் ஆச்சரியமடைந்த ரஜினிகாந்த் இந்த படம் பண்ணி இருந்தா சூப்பரா இருந்திருக்கும் என நெகிழ்ந்து கூறினாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X