கருப்பு சட்டையில் கலக்கும் ரஜினி.. காரணம் என்னவா இருக்கும்?

Recommended Video

எந்த இடம் சென்றாலும், வந்த இடம் மறவாதே - Rajinikanth

கோவா: சர்வதேச திரைப்பட விழா கோவாவில் தற்போது துவங்கியுள்ளது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்து குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தனர்.

இந்திய சர்வதேச திரைப்பட விழா வெற்றிகரமாக தனது 50வது பொன் விழா ஆண்டை கொண்டாடி வரும் நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்துக்கு ஐகான் ஆஃப் இந்திய சினிமா விருது வழங்கப்படவுள்ளது.

கோவாவில் நடைபெறும் இந்த சர்வதேச திரைப்பட விழாவுக்கு நடிகர் ரஜினிகாந்த், தனது மனைவி லதா ரஜினிகாந்தை உடன் அழைத்துச் சென்றுள்ளார்.

பொன் விழா

பொன் விழா

ஆரம்பத்தில் டெல்லி, சென்னை போன்ற நகரங்களில் நடைபெற்று வந்த சர்வதேச திரைப்பட விழா, மறைந்த முன்னாள் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் விருப்பத்திற்கு இணங்க கோவாவில் நடைபெற துவங்கியது. தற்போது, மனோகர் பாரிக்கர் மறைந்த நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இந்த பொன் விழா நடைபெறுவதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்டைல் ஐகான்

ஸ்டைல் ஐகான்

ஐகான் ஆஃப் இந்திய சினிமா விருதினை பெறப்போகும் நடிகர் ரஜினிகாந்த், கோவா சர்வதேச திரைப்பட விழா அரங்கிற்குள் கோவாவின் முதல்வர் பிரியதர்ஷனுடன் ஸ்டைலாக நுழைந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவப்பட்டு, ஸ்டைல் ஐகான் எப்பவுமே தலைவர் தான் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அமிதாப் பச்சன்

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கலந்து கொண்டுள்ளனர். இந்திய திரையுலகின் இரு பெரும் ஜாம்பவான்கள் ஒன்றாக நடந்து வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கருப்பு சட்டை

பொதுவாக வெள்ளை உடைகளில் நடிகர் ரஜினி வலம் வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த கமல் 60 நிகழ்ச்சியிலும், இன்று கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவின் பொன் விழா துவக்க விழாவிலும் நடிகர் ரஜினிகாந்த் கருப்பு நிற உடை அணிந்தே வருகிறார். தேவைப்பட்டால், நடிகர் கமலுடன் இணையவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்ததன் மாற்றத்திற்கு காரணமாக இது இருக்குமோ என கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X