கடைசி வரை வராத ரஜினி.. காத்திருந்து ஏமாந்த ரசிகர்கள்.. இந்த பிரபல நடிகர்களும் ஓட்டுப்போட வரல!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் காலையிலேயே வாக்களிக்க வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வராமல் இருந்தபோதே ஏகப்பட்ட யூகங்கள் கிளம்பின.

இந்நிலையில், வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், கடைசி வரைக்கும் நடிகர் ரஜினிகாந்த் ஓட்டுப் போட வராததால், அவரை காண காலையில் இருந்து காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ரஜினிகாந்த் மட்டுமின்றி நடிகர் அஜித், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்ட பல சினிமா நடிகர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குப்பதிவு நிறைவு

வாக்குப்பதிவு நிறைவு

நகர்ப்புற ஊராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. சென்னையில் பொதுமக்கள் ஆர்வம் செலுத்தாத நிலையில், பிற மாவட்டங்களில் மக்கள் ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தினர். சினிமா பிரபலங்களும் இந்த தேர்தலில் வாக்கு செலுத்த பெரிய ஆர்வம் காட்டவில்லை.

விஜய், சூர்யா, கார்த்தி

விஜய், சூர்யா, கார்த்தி

காலையிலேயே சிகப்பு நிற காரில் வந்து நீலாங்கரையில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கினை நடிகர் விஜய் செலுத்தி விட்டு சென்றார். ஐஸ்வர்யா ராஜேஷ், அருண் விஜய், விமல், வைரமுத்து, டி ராஜேந்தர், பாரதிராஜா உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். மதிய நேரத்தில் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து வந்து திநகரில் உள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்கினை செலுத்தினர்.

ரஜினிகாந்த் வரவில்லை

ரஜினிகாந்த் வரவில்லை

நடிகர் ரஜினிகாந்த் எப்போதும் போல இன்றும் காலையிலேயே தனது ஜனநாயக கடமையை ஆற்ற வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி வரை அவர் வரவே இல்லை. மேலும், நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் இருந்து எந்தவொரு அறிவிப்பும் வராதது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

மாலைக்குள் நடிகர் ரஜினிகாந்த் கண்டிப்பாக வந்து வாக்கு செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி வரை அவர் வராத நிலையில், காலையில் இருந்து அவருக்காக காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து பிரச்சனை காரணமா? அல்லது கொரோனா காரணமாக வாக்கு செலுத்த செல்ல வேண்டாம் என மருத்துவர்கள் ஆலோசனை அளித்திருந்தனரா? என ஏகப்பட்ட யூகங்கள் கிளம்பி உள்ளன.

அஜித் முதல் சிம்பு வரை

அஜித் முதல் சிம்பு வரை

விஜய், சூர்யா, கார்த்தி, கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் வாக்களித்த நிலையில், அஜித், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, விஷால், திரிஷா உள்ளிட்ட பிரபலங்கள் வாக்கு செலுத்த வராதது சர்ச்சையை கிளப்பி உள்ளது. சினிமா ஷூட்டிங்கில் பிசியாக இருப்பதால் நடிகர்கள் வாக்களிக்க வரவில்லை என்றும் கூறப்படுகிறது. நடிகர் சிம்பு மாலைக்குள் சென்னைக்கு திரும்பி வாக்கு செலுத்துவார் என டி ராஜேந்தர் சொன்ன நிலையில், சிம்புவும் தனது வாக்கை செலுத்தவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X