அஜித், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன்லாம் இன்னைக்கு ஓட்டுப் போட மாட்டாங்களா? இதுதான் காரணமா?

சென்னை: நடிகர் விஜய் காலையிலேயே வந்து வாக்கு செலுத்திய நிலையில், ரஜினிகாந்த் எங்கப்பா ஆளையே காணோம் என ஒட்டுமொத்த மக்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

மேலும், அஜித், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன்லாம் இன்னமும் ஓட்டுப் போட வரவில்லையே? என்ன ஆச்சு யாருக்குமே ஜனநாயக கடமையை ஆற்றும் எண்ணம் இல்லையா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

இந்நிலையில், இந்த முன்னணி நடிகர்கள் இன்று வாக்களிக்கவே வர மாட்டார்கள் என்கிற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளன.

குடிமகனின் கடமை

குடிமகனின் கடமை

தேர்தலில் வாக்கு செலுத்துவது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக கடமையாகும். சினிமா பிரபலங்கள் அதற்கு உதாரணமாக காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களின் வாக்குகளை செலுத்தி விட்டு செல்வார்கள். நடிகர் விஜய் காலையிலேயே தனது ஜனநாயக கடமையை ஆற்றி உள்ளார். ஆனால், மற்ற பிரபலங்களும் பெரிதாக இந்த தேர்தலை பொருட்படுத்தவே இல்லையோ என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ரஜினிகாந்துக்கு என்ன ஆச்சு

ரஜினிகாந்துக்கு என்ன ஆச்சு

தேர்தல் என்றாலே எப்போதுமே முதல் நபராக வந்து தனது வாக்கினை செலுத்திவிடுவார் நடிகர் ரஜினிகாந்த். அரசியலுக்கு இனி வரப் போவதில்லை என அறிவித்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இந்த தேர்தலை புறக்கணித்து விட்டாரா? என்றும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் உள்ளதால் அவர் ஓட்டுப் போட வரவில்லையா? அல்லது உடல்நலக் குறைவு ஏதாவது ஏற்பட்டுள்ளதா? என ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளன.

அஜித் ஏன் வரவில்லை?

அஜித் ஏன் வரவில்லை?

அடுத்த வாரம் நடிகர் அஜித் குமாரின் வலிமை திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அவர் இன்று வாக்களிக்க வரும்போது ரசிகர்கள் அவரை காணும் வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏகே 61 படத்தின் டெஸ்ட் ஷூட் மற்றும் வலிமை இந்தி புரமோஷனுக்காக நடிகர் அஜித் மும்பையில் முகாம் இட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தனுஷ் பிஸி

தனுஷ் பிஸி

ஊட்டியில் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்திலும், ஹைதராபாத்தில் சார் எனும் தெலுங்கு படத்திலும் மாறி மாறி நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். தேர்தலுக்காக சென்னைக்கும் பறந்து வந்து ஓட்டுப் போடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹைதரபாத்திலேயே நடிகர் தனுஷ் உள்ளார் என கூறப்படுகிறது.

Recommended Video

ஓட்டுப் போடுவது டாஸ்க்... முகத்தில் போட்டு வந்தேன் மாஸ்க்... பஞ்ச் பேசி தெறிக்கவிட்ட டி.ராஜேந்தர்!
மும்பையில் சிம்பு

மும்பையில் சிம்பு

பத்து தல, வெந்து தணிந்தது காடு என பிசியாக நடித்து வரும் நடிகர் சிம்பு தற்போது மும்பையில் போட்டோஷூட் ஒன்றில் பிசியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. திநகரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடிகர் சிம்பு வாக்கு செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிம்பு இன்று வாக்கு செலுத்த வர மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிவகார்த்திகேயனும் வரல

சிவகார்த்திகேயனும் வரல

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலர் இந்த தேர்தலை புறக்கணித்தது போலவே தெரிகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளியில் வாக்களிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் காரைக்காலில் ஷூட்டிங்கில் பிசியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் சூர்யா, கார்த்தி, விஜய்சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் இன்று வாக்களிப்பார்களா? மாட்டார்களா? என்கிற விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X