twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு கோடி ரூபாய் தர்றேன்.. எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குல்ல.. எஸ்.. லைட்டா ஒரு பிளாஷ்பேக்!

    |

    Recommended Video

    கொரோனாவுக்கு தடுப்பூசி... இந்தியர் தலைமையில் முயற்சி

    சென்னை: கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடித்தால் ஒரு கோடி ரூபாய் தருவதாக நடிகர் ஜாக்கிசான் தெரிவித்ததை தொடர்ந்து நடிகர் ரஜினிக்காந்தின் அறிவிப்பு பலருக்கும் நினைவுக்கு வந்துள்ளது.

    சீனாவில் உருவானா உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் உலக நாடுகளின் தூக்கத்தை கெடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் மட்டும் இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. இதனிடையே கொரோனா வைரஸுக்கு மூல ஆதாரமாக கருதப்படும் வுகான் மாகாணத்தை சேர்ந்த 5 லட்சம் மக்கள் மாயமாகியுள்ளனர்.

    என்ன சம்மும்மா.. ஜாக்கெட்ட காணோம்.. நெட்டிசன்ஸ் லந்து.. தீயாய் பரவும் சமந்தாவின் புதிய போட்டோ!என்ன சம்மும்மா.. ஜாக்கெட்ட காணோம்.. நெட்டிசன்ஸ் லந்து.. தீயாய் பரவும் சமந்தாவின் புதிய போட்டோ!

    வேலைக்கு ஆகவில்லை

    வேலைக்கு ஆகவில்லை

    அவர்கள் எங்கு சென்றுள்ளார்கள்? அவர்களால் மற்ற நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளதா என்றும் பல நாடுகள் பீதியடைந்துள்ளன. கொரோனா வைரஸ்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் அந்த பணியில் உலக நாடுகள் தீவிரமாய் ஈடுபட்டுள்ளன. ஆனால் இதுவரை எதுவும் வேலைக்கு ஆகவில்லை.

    கொரோனா மருந்து

    கொரோனா மருந்து

    இந்நிலையில்தான் உயிரை குடிக்கும் கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிப்பவர்கள் யாராக இருந்தாலும் ஒரு கோடி ரூபாய் பரிசு கொடுக்கப்படும் என அறிவித்திருக்கிறார் உலகப் புகழ் பெற்ற நடிகரான ஜாக்கி சான். அவரது இந்த அறிவிப்பு எப்படியாவது கொரோனாவுக்கு எதிரான மருந்தை கண்டுபிடிக்க மாட்டார்களா என்ற ஏக்கம் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.

    வறட்சியின் பிடியில்

    வறட்சியின் பிடியில்

    ஒரு கோடி ரூபாய் தருகிறேன்.. என்று ஜாக்கி சான் கூறியதை கேட்டதுமே இதே வார்த்தையை எங்கேயோ கேட்டிருக்கிறோமே என்று தோன்றுகிறதா.. ஆம் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிக்காந்தின் வாயில் இருந்து தான் இந்த வார்த்தையே கேட்டிருக்கிறோம். 18 வருடங்களுக்கு முன்பு தமிழக விவசாயிகள் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்தனர்.

    பிரமாண்ட பேரணி

    பிரமாண்ட பேரணி

    கர்நாடகா காவிரியில் நமக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்காமல் போக்கு காட்டியது. அப்போது தமிழ் திரையுலகினர் பிரமாண்ட போராட்டம் நடத்தினர். நமக்கு தண்ணீர் கொடுக்காத கர்நாடகாவுக்கு நாம் நெய்வேலியில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை கொடுக்கக்கூடாது என நெய்வேலியில் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

    நதிகள் இணைப்பு

    நதிகள் இணைப்பு

    இதனை தொடர்ந்து மறுநாளே நடிகர் ரஜினிகாந்த் காவிரியில் தண்ணீர் வழங்க வலியுறுத்தி தனி ஆளாக சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவருக்கு ஆதரவாக நடிகர் நடிகைகள் பலரும் உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தேசிய நதிகள் இணைப்புக்காக ஒரு கோடி ரூபாய் நிதி வழங்குவதாக அறிவித்தார்.

    அய்யாக்கண்ணு சந்திப்பு

    அய்யாக்கண்ணு சந்திப்பு

    ஆனால் இதுவரை வழங்கவில்லை. கடந்த 2017ஆம் ஆண்டு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு நடிகர் ரஜினிகாந்தை அவரது போய்ஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்தார். அப்போது, தேசிய நதிகளை இணைக்க, தான் கூறியப்படி ஒரு கோடி ரூபாய் பணத்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    ரஜினி ஸ்டைலில் ஜாக்கிசான்

    ரஜினி ஸ்டைலில் ஜாக்கிசான்

    கூறியப்படி நதிகளை இணைக்க தான் ஒரு கோடி ரூபாய் கொடுக்க தயாராக இருப்பதாக ரஜினிகாந்த் கூறியதாக அய்யாக்கண்ணு தெரிவித்தார். ரஜினிகாந்த் நதிகளை இணைக்க ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாக அறிவித்ததை போல, கொரோனா வைரஸை அழிக்கும் மருந்தை கண்டுபிடிக்க தான் ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறியிருக்கிறார் ஜாக்கிசான்.

    English summary
    Jackie chan also has annonced like Rajinikanth. Rajinikanth also annonced rupees one crore to connect rivers in India 18 years before.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X