விடாமுயற்சி படத்தில் ரஜினிகாந்தா?.. அஜித்துடன் அஜர்பைஜானில் என்ன கோலத்தில் இருக்காரு பாருங்க!
சென்னை: லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த உள்ள விடாமுயற்சி திரைப்படம் அஜார் பைஜானில் ஆரம்பமாக உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்கப் போவதாக ஏஐ அட்டகாசத்தை நெட்டிசன்கள் ஆரம்பித்துள்ளனர்.
ஏஐ எனும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் கொண்டு ஏகப்பட்ட புகைப்படங்களை தத்ரூபமாக உருவாக்கி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அஜித்குமார் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு அஜர் பைஜானில் ஹாலிடே மோடில் இருக்கும்படியான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.

விடாமுயற்சி படத்தில் ரஜினிகாந்த்தா?: காவிரி விவகாரம் தொடர்பாக தொடர்ந்து நடிகர்களை வம்பிழுத்து வரும் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது நெட்டிசன் ஒருவர் பதிவிட்ட அஜித்குமார் மற்றும் ரஜினிகாந்தின் புகைப்படங்களை ஷேர் செய்து, " யாருடா நீங்கள் எல்லாம்" எனக் கேள்வி கேட்டுள்ளார்.
போட்டோஷாப் என்று தெரியாத அளவுக்கு ஏஐ தொழில்நுட்பம் மூலமாக வடிவமைக்கப்பட்ட அஜித் மற்றும் ரஜினிகாந்தின் புகைப்படங்களுடன் சேர்த்து விடாமுயற்சி படத்திலும் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்க உள்ளார் என மகிழ்திருமேனியும் லைகாவும் யோசிக்காத ஒரு கதையை உருவாக்கி விட்டனர்.

ஏஐ அட்டகாசம்: லைகா நிறுவனம் தயாரிப்பில் விடாமுயற்சி படத்தில் அஜித்தும் தலைவர் 170 படத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் நிலையில் தயாரிப்பு நிறுவனம் நினைத்தால் இந்த வதந்தியை உண்மையாக மாற்றவும் முடியும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
ரஜினிகாந்த் படத்தில் அமிதாபச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் என நட்சத்திரப் பட்டாளம் நடித்து வரும் நிலையில். அஜித்குமாரின் விடாமுயற்சி படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் வந்தால் அஜித்துக்கும் ஒரு இண்டஸ்ட்ரி கிடைக்கும் என்கின்றனர்.

அரை டவுசருடன் அஜித்: அஜித்தின் விடாமுயற்சி படத்தில் திரிஷா, பிரியா பவானி சங்கர் மற்றும் வில்லனாக சஞ்சய்தத் உள்ளிட்டோர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சட்டையில்லாமல், அரைடவுசரில் அஜித் இருப்பது போன்ற போட்டோக்களை பார்த்தால் ஜிடிஏ கேமில் அஜித்தை கொண்டு வரலாம் போல என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும், அஜித் தலை மற்றும் ராஜ்கிரண் உடம்பை வைத்து ஏஐ சித்து விளையாட்டு விளையாடி உள்ளது என்றும் ரஜினிகாந்த் பீச்சில் நிற்கும் அந்த ஸ்டைலே தனி கெத்து தான் என கலாய்த்து வருகின்றனர்.
கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா, பிரபல நடிகர்களை இப்படி மாத்தி காமெடி பண்றீங்களே என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











