ஒரே இடத்தில் ரஜினி, அஜித்... தலைவர் - தல மீட்டிங் எப்ப பாஸ்?
சென்னை: ரஜினிகாந்த், அஜீத்குமார் நடிக்கும் படங்களின் ஷூட்டிங் ஒரே இடத்தில் நடப்பதால், இருவரும் சந்தித்து பேச வாய்ப்பிருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம், தர்பார். இதில் நயன்தாரா அவர் ஜோடியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். லைகா தயாரித்துள்ள இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.

தலைவர் 168
இதையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 168-வது படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இதில் நடிகர் ரஜினிகாந்துடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

டி.இமான் இசை
ரஜினியின் எந்திரன், பேட்ட படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதற்கு டி.இமான் இசையமைக்கிறார். விவேகா பாடல்கள் எழுதுகிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியுள்ளது.

அஜித்தின் வலிமை
இங்கு, ஏற்கனவே அஜித்தின் வலிமை படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. நேர் கொண்டப் பார்வை படத்தை அடுத்து இதையும் ஹெ.வினோத் இயக்குகிறார். இதன் ஆக்ஷன் காட்சிகளின் படப்பிடிப்புகள் அங்கு நடந்து வருகிறது.

ஒரே ஓட்டல்
ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இரண்டு ஓட்டல்கள் உள்ளன. ஒன்று ஐந்து நட்சத்திர ஓட்டல். மற்றொன்று மூன்று நட்சத்திர ஓட்டல். இந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில்தான் ரஜினி, அஜித் தங்கியுள்ளனர். மூன்று நட்சத்திர ஓட்டலில் டெக்னீஷியன்கள் தங்கியுள்ளனர்.

சந்திப்பு
ஒரே இடத்தில் இருவரும் தங்கியுள்ளதால், இருவரும் விரைவில் சந்தித்துப் பேசுவார்கள் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











