அமிதாப் பச்சன் நடித்தும் இவ்வளவு தானா?.. இந்தியில் அடிவாங்கிய வேட்டையன்.. ரஜினிக்கு வந்த சோதனை!

மும்பை: ஜெயிலர் படத்தை போலவே மாநிலத்துக்கு ஒரு முன்னணி நடிகரை நடிக்க வைத்து பெரிதாக கல்லா கட்டி விடலாம் என நினைத்த லைகா நிறுவனம் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தில் பாலிவுட்டில் இருந்து அமிதாப் பச்சன், கேரளாவில் இருந்து பகத் ஃபாசில், மஞ்சு வாரியர், தெலுங்கில் இருந்து ராணா டகுபதி என ஏகப்பட்ட நட்சத்திரங்களை படத்தில் இறக்கியிருந்தார்.

படத்திற்கான பட்ஜெட்டில் முக்கால்வாசி சம்பளம் ரஜினிகாந்த் மற்றும் மற்ற நடிகர்களுக்கே சென்று விட்ட நிலையில், குறைவான பொருட்செலவிலேயே ஞானவேல் இந்த படத்தை இயக்கி உள்ளார். கடைசியில் அந்த 2 ஹெலிகாப்டர் வாடகை தான் அதிகம் ஆகியிருக்கும் என தெரிகிறது.

vettaiyan vettaiyan box office rajinikanth

தமிழ் சினிமாவில் தொடர்ந்து இந்தி மார்க்கெட்டை பிடிக்க போராடி வரும் நடிகர்கள் வில்லன் கதாபாத்திரத்திலும், ஹீரோயின் கதாபாத்திரத்திலும் இந்தி நடிகர்களை நடிக்க வைத்து வருகின்றனர். வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன் நடித்தும் வெறும் 60 லட்சம் மட்டுமே முதல் நாளில் இந்தி பெல்ட்டில் வசூல் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டார்களுக்கெல்லாம் சுப்ரீம்: வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க முடியவில்லை என்றும் வீடியோ மெசேஜ் மூலமாக அமிதாப் பச்சன் ரஜினிகாந்தையும் வேட்டையன் படத்தையும் பாராட்டியிருந்தார். ஸ்டார்களுக்கெல்லாம் சுப்ரீம் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அமிதாப் பச்சன் பாராட்டியது ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் ஆக்கியது.

ஜெயிலரை விட சிறப்பான கதை: வேட்டையன் படத்தை பல்வேறு மொழிகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்ட லைகா நிறுவனம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் வரவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயிலர் படத்தை விட வேட்டையன் படத்தில் நல்ல கதை மற்றும் மாஸ் இருந்த நிலையிலும் இந்த படம் இந்தியில் வசூலில் அடிவாங்கியுள்ளது.

இயக்குநர் சொதப்பிட்டாரு: நீட்டுக்கு எதிரான கருத்தையும் ஆன்லைன் கல்விக்கு எதிரான விஷயத்தையும் சொல்ல நினைத்த இயக்குநர் படத்தில் ரஜினிக்காக தேவையில்லாமல் என்கவுன்ட்டரை உள்ளே நுழைத்து அமிதாப் பச்சனையும் திணித்து திரைக்கதை வடிவமைப்பில் பல்வேறு தவறுகளை செய்தது தான் வேட்டையன் படம் அனைத்து மொழி ரசிகர்களையும் கவர முடியாமல் போனதற்கு காரணம் என்கின்றனர். உலக ரசிகர்களையே ஜெய்பீம் உலுக்கிய நிலையில், வேட்டையன் படம் பக்கத்து மாநில ரசிகர்களையே ஈர்க்கவில்லையே ஏன் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

60 லட்சம் தான் வசூல்: குட்டிச்சுவத்தை எட்டிப்பார்த்தா உசுர கொடுக்க கோடி பேருன்னு சொன்னாரு, தியேட்டருக்குள் ஒருத்தனையும் காணோமே என இந்தி பெல்ட்டில் தியேட்டர்கள் காத்து வாங்குவதை வீடியோக்களாக எடுத்து வெளியிட்டு விஜய் ரசிகர்கள் ரஜினி ரசிகர்களை கலாய்த்து வருகின்றனர். வேட்டையன் திரைப்படம் முதல் நாளில் இந்தியில் வெறும் 60 லட்சம் ரூபாய் தான் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மற்றும் ஆந்திராவில் 3 கோடிக்கும் மேல் வசூல் செய்த நிலையில், இந்தியில் 1 கோடி வசூலை கூட முதல் நாளில் வேட்டையன் கடக்கவில்லை. டோலிவுட் படங்கள் இந்தி பெல்ட்டில் கோலோச்சுவது போல தமிழ் படங்களால் பெரிய வசூலை ஈட்டமுடியவில்லை என்பது வருத்தத்தை தருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X