கருப்பு சட்டையில் ரஜினிகாந்த்.. அந்த பக்கம் ஏ.ஆர். ரஹ்மான்.. லால் சலாம் ஆடியோ லான்ச் சும்மா அதிருது!

சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், உள்ளிட்ட பலர் நடித்துள்ள லால் சலாம் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் எனும் கேமியோ ரோலில் நடித்துள்ளார். வரும் பிப்ரவரி 9ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், ஆடியோ லான்ச் இன்று நடைபெறுகிறது.

லால் சலாம் ஆடியோ லான்ச் விழாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கருப்பு சட்டையில் காரில் சும்மா கெத்தாக லியோ முத்து இன்டோர் ஸ்டேடியத்துக்குள் அதிரடி என்ட்ரி கொடுத்த காட்சிகள் தற்போது இணையத்தில் தீயாக பரிந்துரைக்கின்றன.

Rajinikanth and AR Rahman looks cool at Lal Salaam Audio Launch

லைகா நிறுவனத்துடன் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் படத்தில் நடித்த ரஜினிகாந்த் கடந்த ஆண்டு இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த நிலையில், கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்துக்கு புதிய சொகுசு கார் ஒன்றையும், லாபத்தில் ஒரு பங்கையும் பரிசாக வழங்கினார். இந்நிலையில் அடுத்ததாக ரஜினிகாந்தின் கால்ஷீட்டை லைகா நிறுவனம் பெற்ற நிலையில் லால் சலாம் மற்றும் வேட்டையன் என அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்து வருகிறார். லைகா சுபாஸ்கரன் உடன் ரஜினிகாந்த் அரங்கத்திற்குள் நுழைய ஒட்டுமொத்த ரசிகர்களும் தலைவா என்றும் சூப்பர் ஸ்டார் என்றும் கோஷமிட்டனர்.

Rajinikanth and AR Rahman looks cool at Lal Salaam Audio Launch

இந்தப் பக்கம் இசைப்புயல்: லால் சலாம் இசை வெளியீட்டு விழாவின் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் சிவப்பு மற்றும் கருப்பு கலந்த கோட் மற்றும் கூலர்ஸ் அணிந்து கொண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அருகில் அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளன. இந்தப் பக்கம் ரஹ்மான் மற்றும் அந்தப் பக்கம் சுபாஷ்கரன் அமர்ந்திருக்க நடுவே ரஜினிகாந்த் கருப்பு சட்டை அணிந்து கொண்டு கலக்கலாக அமர்ந்துள்ளார்.

Rajinikanth and AR Rahman looks cool at Lal Salaam Audio Launch

காக்கா கழுகு கதை இருக்குமா?: லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி மறைவு மற்றும் சமீபத்தில் உயிரிழந்த விஜயகாந்த் உள்ளிட்ட பிரபலங்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரஜினிகாந்த் பேச்சு தான் ஹைலைட் என்பதால், மீண்டும் காக்கா - கழுகு கதை இருக்குமா? என ரசிகர்கள் பலரும் சோஷியல் மீடியாவில் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகின்றனர். ஆனால், நடிகர் ரஜினிகாந்த் இந்த முறை எப்போதும் போல பாசிட்டிவாகத்தான் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X