Rajinikanth: அடேங்கப்பா.. ரஜினிகாந்தும் பாலகிருஷ்ணாவும் ஒரே படத்தில் நடிக்கப் போறாங்களா.. இது எப்போ?
சென்னை: ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார் மற்றும் மோகன் லால் என தென்னிந்தியாவின் 3 உச்ச நடிகர்கள் ஒன்றாக இணைந்து நடித்து வரும் நிலையில், அடுத்ததாக ரஜினிகாந்தும் பாலகிருஷ்ணாவும் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்கப் போவதாக ஹாட் அப்டேட் வெளியாகி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் 70 வயதை கடந்த நிலையிலும் படு பிசியான டாப் ஹீரோவாக கோலிவுட்டில் வலம் வருகிறார்.
ஜெயிலர், லால் சலாம், ஞானவேல்ராஜா உடன் ஒரு படம், லோகேஷ் கனகராஜ் உடன் ஒரு படம் என இப்பவே கை வசம் 4 படங்கள் உள்ளன.

வேறலெவல் எனர்ஜியில் ரஜினி: வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் மாறவே இல்லை என படையப்பா படத்தில் சொல்லியே பல வருடங்கள் ஆகி விட்டன. இப்பவும் அதே எனர்ஜியுடன் அடுத்தடுத்த படங்களில் நடித்து அசத்தி வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
கடைசியாக ரஜினிகாந்த் நடித்த தர்பார், அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் அட்டு ஃபிளாப் ஆன நிலையில், ஜெயிலர், லால் சலாம் படங்கள் மூலம் அதிரடி கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார்.
பாலய்யாவுடன் ஒரு படம்: டோலிவுட்டின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா உடன் இணைந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு படம் பண்ண மாட்டாரா என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு கூடிய சீக்கிரமே அப்படியொரு படம் உருவாகப் போவதாக ஹாட் அப்டேட் வெளியாகி உள்ளது.

சமீபத்தில், என்டிஆர் 100வது ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராஜ ரஜின்காந்த் சென்ற நிலையில், தான் இப்படி ஒரு படம் உருவாவதற்காக பேச்சுவார்த்தைகள் எழுந்ததாகவும் தற்போது அந்த படத்தை இன்னொரு பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் இணைந்து செய்யப் போகிறார் என்கின்றனர்.
மூன்று சூப்பர் ஸ்டார்கள்: ரஜினிகாந்த், பாலகிருஷ்ணா மட்டுமின்றி கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் சிவராஜ் குமாரும் இந்த படத்தில் இணையப் போவதாகவும் இந்த படத்தையே தயரித்து கன்னட இயக்குநரை வைத்து 2 பாகங்களாக உருவாக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ள நிலையில், இன்னும் ஓரிரு ஆண்டுக்குள் இந்த படத்தின் பூஜை போடப்பட்டு ஷூட்டிங் துவங்கும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











