சூப்பர்.. எனக்கும் ஒரு கதை யோசிங்க.. இயக்குநர் தேசிங்கு பெரியசாமியிடம் ரஜினி பேசியது இதுதான்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநரிடம் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended Video

தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்ட Dulquer Salman | Prabhakaran

துல்கர் சல்மான், ரிது வர்மா நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சக்கை போடு போட்ட படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.

இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கியிருந்தார்.

 பெயரை குறிப்பிடாமல்

பெயரை குறிப்பிடாமல்

இந்தப் படத்தை தற்போது பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் தேசிங்கு பெரியசாமியை போனில் தொடர்பு கொண்டு பாராட்டினார். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்த இயக்குநர் பெரியசாமி, ரஜினிக்காந்தின் பெயரை கூட குறிப்பிடாமல் கடவுளுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

 சூப்பர்.. எக்ஸலென்ட்..

சூப்பர்.. எக்ஸலென்ட்..

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் தேசிங்கு பெரியசாமியிடம் பேசிய தொலை பேசி ஆடியோ லீக்காகி வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருப்பதாவது, உங்க படத்த நேத்துதான் பார்த்தேன்.. சூப்பர்.. எக்ஸலென்ட்.. நான் திரும்பவும் பார்க்கிறேன்.. வாழ்த்துகள்..

 எனக்கும் யோசியுங்கள்

எனக்கும் யோசியுங்கள்

சாரி இவ்ளோ லேட்டா உங்க படத்தை பார்க்குறதுக்கு..
உங்களுக்கு பெரிய எதிர்காலம் இருக்கு.. எனக்கும் ஏதாவது யோசியுங்கள் என்று ரஜினிகாந்த் கூற.. எதிர்முனையில் அய்யோ சார் என தேசிங்கு பெரியசாமி பதறுகிறார்.

 சீரியஸ்லி யோசிங்க

சீரியஸ்லி யோசிங்க

பின்னர் சீரியஸ்லி எனக்காக யோசிங்க என கூறுகிறார் ரஜினிகாந்த்.. மீண்டும் படம் நன்றாக உள்ளது என்று கூறும் ரஜினிகாந்த் கடவுளின் ஆசிர்வாதம் என முடிக்கிறார். இந்த ஆடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. இதனைக் கேட்ட ரஜினி ரசிகர்கள் செம குஷியாகியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X