புனீத் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது: ரஜினி, Jr NTR கைகளால் விருது பெற்றார் அப்புவின்மனைவி!
சென்னை: மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரை கெளரவிக்கும் வகையில் கர்நாடக அரசு அவருக்கு கர்நாடக ரத்னா விருது அறிவித்தது.
இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்டிஆர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இருவரும் விமான நிலையத்தில் வந்து இறங்கிய புகைப்படங்கள் டிரெண்டாகின.
இந்நிலையில், சற்றுமுன் புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினியிடம் அந்த உயரிய விருது வழங்கப்பட்டது.

அப்பு இல்லை
கன்னட திரையுலகினர் அப்பு என அன்போடு அழைக்கும் புனீத் ராஜ்குமார் இன்று நம்மிடையே இல்லை. கடந்த ஆண்டு அக்டோபர் 29ம் தேதி மாரடைப்பு காரணமாக அவர் காலமானது ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகையே சோகத்தில் மூழ்கடித்தது. அவரது பெயரால் ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஆம்புலன்ஸ் சேவையும் தொடங்கப்பட்டது.

கர்நாடக ரத்னா விருது
பாரத ரத்னா விருதுக்கு இணையாக கர்நாடகாவில் கர்நாடக ரத்னா விருது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், புனீத் ராஜ்குமார் மறைந்த நிலையில், அவருக்கு இன்று வழங்கி அம்மாநில அரசு மிகப்பெரிய கெளரவத்தை அளித்துள்ளது. அந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

தனி விமானம் மூலம்
நடிகர் ரஜினிகாந்த் கைகளால் இந்த விருது கொடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. சென்னையில் பலத்த மழை பெய்து வந்த போதும் நடிகர் ரஜினிகாந்த் கொடுத்த வார்த்தையை காப்பாற்ற வேண்டும் என்பதால் தனி விமானத்தின் மூலம் பெங்களூருவுக்கு மதியமே சென்றார். அவரை அம்மாநில அரசு அன்போடு வரவேற்ற புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகின.

ஜூனியர் என்டிஆர் வருகை
தமிழ்நாட்டில் இருந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சென்ற நிலையில், டோலிவுட்டில் இருந்து ஆர்ஆர்ஆர் நாயகன் ஜூனியர் என்டிஆர் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேடையில் வயதான ஒருவருக்கு ஜூனியர் என்டிஆர் இருக்கை கொடுத்த காட்சிகளும் டிரெண்டாகி வருகின்றன.

அஸ்வினிக்கு மரியாதை
புனீத் ராஜ்குமாரின் மறைவால் மிகவும் வாடிப்போயுள்ள அவரது மனைவி அஸ்வினிக்கு கர்நாடக அரசு சார்பாக புனீத் ராஜ்குமாருக்கு வழங்கப்படும் இந்த கர்நாடக ரத்னா விருது வழங்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்டிஆர் பங்கேற்றனர்.

ரஜினி, ஜூனியர் என்டிஆர்
நடிகர் ரஜினிகாந்த், ஜூனியர் என்டிஆர் மற்றும் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகிய மூவரும் ஒன்றாக இணைந்து கர்நாடக ரத்னா விருதை புனீத் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினிக்கு தற்போது வழங்கிய புகைப்படங்கள் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. புனீத் ராஜ்குமாரின் புகழ் சினிமாவில் எப்போதும் மறையாமல் நீடித்து இருக்கும் என பங்கேற்ற பிரபலங்கள் பேசியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











