பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீடு..ரஜினி -கமல் பங்கேற்பு? -சூப்பரா களைகட்டுமே!
சென்னை : மணிரத்னத்தின் சீரிய முயற்சியில் உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.
வரும் செப்டம்பர் 30ம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகவுள்ளது. இதையடுத்து சூப்பர் ப்ரமோஷன்களில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
டீசர், பாடல் வெளியீடு என அடுத்தடுத்து பிரம்மாண்டமாக அரங்கேற்றியுள்ளது. இதையடுத்து படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

பொன்னியின் செல்வன் படம்
மணிரத்னத்திற்கு மட்டுமல்ல, எம்ஜிஆர் முதல் அனைத்து கலைஞர்களுக்கும் விருப்பமான கதையாக அமைந்திருந்தது பொன்னியின் செல்வன். அந்த நாவலை நாம் படிக்கும்போதே நம்மை அந்தக் காலகட்டத்திற்கு கடத்துவார் கல்வி. அந்த அளவில் அனைவரையும் கவர்ந்த அந்த கதையை படமாக எடுக்க அனைவரும் விருப்பப்பட்டதில் எந்த வியப்பும் இல்லை.

செப்டம்பர் 30ல் ரிலீஸ்
மணிரத்னமே இந்த படத்தை திரைப்படமாக்க பல முறை முயற்சித்து தற்போது அதை சாத்தியப்படுத்தியுள்ளார். இந்தப் படம் இரண்டு பாகமாக வெளியாகவுள்ளது. படத்தின் முதல்பாகம் உருவாகி வரும் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. படத்தில் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

பிரம்மாண்டமான இசை வெளியீடு
இவர்களின் போஸ்டர்கள்தான் முதலில் வெளியானது. தொடர்ந்து படத்தின் டீசர், பாடல் என அடுத்தடுத்து பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. அடுத்ததாக தற்போது படத்தின் இசை வெளியீடும் சிறப்பான வகையில் நடைபெறவுள்ளது. வரும் செப்டம்பர் 6ம் தேதி இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.

சிறப்பான பொன்னி நதி பாடல்
படத்தின் முதல் பாடல் பொன்னி நதி கடந்த வாரத்தில் வெளியாகி ஒரு கோடியே 20 லட்சம் பார்வைகளை யூடியூபில் கடந்துள்ள நிலையில், அடுத்த வாரத்தில் படத்தின் இரண்டாவது பாடலை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டு அதற்கான வேலைகளை தற்போது மும்முரமாக செய்து வருகிறது.

ரஜினி -கமலுக்கு அழைப்பு
இதனிடையே இன்னும் சில தினங்களில் நடத்தப்பட உள்ள படத்தின் பாடல் வெளியீட்டிற்கு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த டீசர் வெளியீட்டின்போதே இவர்கள் கலந்துக் கொள்வார்கள் என்று தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இசை வெளியீட்டிற்கும் இவர்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
Recommended Video

தமிழின் சிறப்பான படைப்பு
தமிழின் சிறப்பான படைப்பான பொன்னியின் செல்வன் தற்போது திரைவடிவம் பெற்று வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டில் தமிழகத்தின் சூப்பர்ஸ்டார்கள் கலந்துக் கொள்வது படத்திற்கான வரவேற்பை மேலும் கூட்டுவதாக அமையும்.


Click it and Unblock the Notifications











