ரஜினியும் கமலும் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஹீரோவா?.. இது எப்போ.. கார்த்திக் சுப்புராஜ் ட்வீட்!

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வரும் நவம்பர் 10-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.

ஜிகர்தண்டா திரைப்படத்தில் பாபி சிம்ஹா நடித்த அசால்ட் சேது கதாபாத்திரத்திற்கு தேசிய விருது கிடைத்த நிலையில், அந்த கதாபாத்திரத்தை முதலில் தன்னிடம் சொல்லி இருந்தால் தானே நடித்திருப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜிடம் சொல்லி பாராட்டி இருந்தார்.

Rajinikanth and Kamal Haasan is the first choice for Jigarthanda Double X?


அதன் விளைவாகவே பேட்ட படத்தை இயக்கும் வாய்ப்பு கார்த்திக் சுப்புராஜுக்கு கிடைத்தது. இந்நிலையில், ஜிகர்தண்டா 2 படத்தை சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகனை வைத்து இயக்க விருப்பப்பட்டதாகவும், ஆனால், தான் முந்தைய ஜெனரேசனில் பிறக்காத நிலையில், தற்போது அதனை சாதிக்க இப்படி ஒரு படத்தை எடுத்திருப்பதாக பதிவிட்டுள்ளார்.

ரஜினி - கமல்: தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ என ராகவா லாரன்ஸை டிரைலரில் அறிமுகப்படுத்தும் போதே அது ரஜினிகாந்தின் ரெஃபரன்ஸ் தான் என ரசிகர்கள் கொண்டாடினர். இந்நிலையில், எஸ்.ஜே சூர்யாவின் இயக்குநர் கதாபாத்திரமே கமல்ஹாசனை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ள நிலையில் ரசிகர்களுக்கு இந்த தீபாவளி டபுள் ட்ரீட் தான் என கொண்டாடி வருகின்றனர்.

ஏஐ மூலமாக ராகவா லாரன்ஸ் முகத்திற்கு பதில் ரஜினிகாந்த் முகத்தையும், எஸ்.ஜே. சூர்யா முகத்திற்கு பதிலாக கமல்ஹாசன் முகத்தையுமே வைத்து கார்த்திக் சுப்புராஜின் அசோஷியேட் டைரக்டர் பாலு என்பவர் எடிட் செய்த புகைப்படத்தை தற்போது வெளியிட்டு தனது சந்தோஷத்தை கார்த்திக் சுப்புராஜ் ஷேர் செய்துள்ளார்.

உண்மையா இருந்தா?: இது மட்டும் ரியலாகவே ரஜினிகாந்த் மற்றும் கமல் நடித்த படமாக இருந்தால், இந்நேரமே டிக்கெட்டுகள் அனைத்தும் ஒரு வாரத்துக்கு விற்றுத் தீர்ந்து இன்னொரு இண்டஸ்ட்ரி ஹிட்டை இந்த வருஷம் கொடுத்திருக்கும். ஆனால், இந்த தீபாவளிக்காவது ராகவா லாரன்ஸுக்கு ஒரு நல்ல கம்பேக் கிடைக்கிறதா? என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

இந்த ஆண்டு வெளியான ருத்ரன், சந்திரமுகி 2 படங்கள் வச்சு செய்த நிலையில், எஸ்.ஜே. சூர்யா ராகவா லாரன்ஸையும் காப்பாற்றி விடுகிறாரா என்பது இன்னும் 2 நாட்களில் தெரிந்து விடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X