ரஜினி, கமலை விட அந்த ஃபாரின் பொண்ணுங்க நல்லா இருக்கே.. நெல்சன் குசும்பு.. குவியும் கமெண்ட்ஸ்!
சென்னை: இன்பன் உதயநிதி தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் பல பல வருடங்கள் கழித்து ஒன்றாக சேர்ந்து நடிக்கும் படத்தின் அட்டகாசமான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இணையத்தை ஒட்டுமொத்தமாக ஆட்டிப்படைத்து வருகிறது.
ஆரம்பத்தில் அபூர்வ ராகங்கள், அவள் அப்படித்தான், பதினாறு வயதினிலே, இளமை ஊஞ்சல் ஆடுகிறது, தில்லு முல்லு, நினைத்தாலே இனிக்கும், அலாவுதினும் அற்புத விளக்கும் என பல படங்களில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடித்தனர்.

அலாவுதினும் அற்புத விளக்கும் படத்திற்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்க வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்து ஒரு சூப்பர் ஸ்டாராகவும் ஒருவர் உலக நாயகனாகவும் 50 ஆண்டு காலமாக தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வரும் நிலையில், இருவரும் மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க முடிவெடுத்து தற்போது அட்டகாசமான ப்ரோமோ வீடியோவும் வந்து விட்டது.
கமல் ஹீரோ.. ரஜினி வில்லன்: அந்த காலத்தில் பல படங்களில் கமல் ஹீரோவாகவும் ரஜினிகாந்த் வில்லனாகவும் தான் நடித்தனர். இந்நிலையில், ரஜினி ஹீரோவாகவும் கமல் வில்லனாகவும் இந்த படத்தில் நடித்தால் நல்லா இருக்கும் என ரஜினி ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இருவருமே ஹீரோவாகத்தான் இருப்பார்கள் என்றும் ஈகோ கிளாஷ் கதையாக எடுத்தால் நெல்சனுக்கு வேறலெவல் பிளாக்பஸ்டர் வெயிட்டிங் என நியூட்ரல் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஃபாரீன் பொண்ணுங்க நல்லா இருக்கு பாஸ்: ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருமே டல்லடித்து தான் காணப்படுகின்றனர். ப்ரோமோவில் அந்த ஃபாரின் பொண்ணுங்க தான் நல்லா இருக்கு பாஸ் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
ஏஐ முருகேசா: ஆனால், அது ஃபாரின் மாடல் நடிகைகள் இல்லை என்றும் நெல்சன் பட்ஜெட்டை குறைப்பதற்காக ஏஐ மாடல்களையே அதிகம் யூஸ் செய்திருப்பதால் தான் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை விட அவர்கள் பளிச்சென ப்ரோமோவில் கவர்ச்சியாகா தெரிகின்றனர் என்றும் அது ஏஐ முருகேசா என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.
1000 கோடி வசூல்: ஜெயிலர் 2, சிபி சக்கரவர்த்தி படங்களை விட அடுத்து ரஜினிகாந்த் மற்றும் கமல் இணைந்து நடிக்கும் இந்த படத்துக்குத்தான் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைந்தாவது தமிழ் சினிமாவுக்கு 1000 கோடி வசூலை சாத்தியமாக்குவார்களா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











