இன்பநிதி கையால் சம்பளம் வாங்கும் ரஜினி, கமல்.. எல்லோரும் இப்படி ஓட்டுறாங்களே.. என்னங்க நடக்குது?

சென்னை: ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் இணையும் KH X RK திரைப்படத்தின் ப்ரோமோ இன்று வெளியாகவிருக்கிறது. அதுகுறித்த பேச்சாகத்தான் சோஷியல் மீடியா எங்கும் இருக்கிறது. எப்படிப்பட்ட ப்ரோமோவாக இருக்கும்; ரஜினியும், கமலும் சேர்ந்து என்ன மாதிரியான கெட்டப்பில் வரப்போகிறார்கள் என பல கேள்விகள் ரசிகர்கள் மனதில் இருக்கின்றன. இது ஒருபக்கம் இருக்க இன்பநிதி இந்தப் படத்தை தயாரிப்பது குறித்தும் பேச்சுக்கள் அதிகம் எழுந்திருக்கின்றன.

ரஜினியும், கமலும் கடந்த 1981ஆம் ஆண்டு வெளியான தில்லுமுல்லு படத்தில் சேர்ந்து நடித்தார்கள். அதில் கமல் கேமியோ ரோல் செய்திருந்தார். அதற்கு பிறகு அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் இரண்டு பேரின் வளர்ச்சியும் உச்சத்துக்கு சென்றுவிட்டது. ரஜினி சூப்பர் ஸ்டார் என்றும், கமல் உலக நாயகன், விண்வெளி நாயகன் என்றும் கொண்டாடப்படுகிறார்கள். அவர்கள் தனித்தனியாக நடித்து பல சம்பவங்கள் செய்துவிட்டாலும்; மீண்டும் ஒருமுறை அவர்கள் சேர்ந்து நடிப்பதை பார்த்துவிட மாட்டோமா என்று ஏங்கினார்கள் ரசிகர்கள்.

KH X RK திரைப்படம்: சூழல் இப்படி இருக்க ரஜினியை வைத்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் கமல் ஒரு படத்தை தயாரிக்கிறார். இந்த அறிவிப்பே பலருக்கும் சர்ப்ரைஸை கொடுத்த நிலையில்; அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பும் வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காட செய்துவிட்டது. நெசன் திலீப்குமார் இயக்க; அனிருத் இசையமைக்கிறார். கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு பிறகு அவர்கள் சேர்ந்து நடிப்பதால் எங்கும் அந்தப் படம் பற்றிய பேச்சாகத்தான் இருக்கிறது.

Rajinikanth and Kamal Haasan s KH X RK Film Sparks Debate as Inbanithi Stalin Turns Producer
Photo Credit:

இன்று வெளியாகும் ப்ரோமோ: இந்தப் படத்தின் ப்ரோமோ இன்று 12.07 மணிக்கு வெளியாகவிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக இதுதொடர்பான அப்டேட்டை போஸ்டர்கள் மூலம் வெளியிட்டுவந்தார்கள். இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும் ப்ரோமோ வீடியோவை தியேட்டர்களை காண்பதற்கு டிக்கெட் புக்கிங் தொடங்கி நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. இந்த ப்ரோமோ வீடியோவே ஏகப்பட்ட ரெக்கார்டுகளை படைக்கும் என்றும் எதிர்பார்ப்பு நிலவுவது குறிப்பிடத்தக்கது.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பு: இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. உதயநிதி ஸ்டாலின் அரசியலில் முழு கவனத்தையும் செலுத்த தொடங்கிவிட்டதால்; தற்போது அந்த நிறுவனத்தின் பொறுப்பை அவரது மகன் இன்பநிதி கையில் எடுத்திருக்கிறார். அவர் சினிமாவில் தயாரிக்கும் முதல் படமே ரஜினி, கமல் இணையும் ஐகானிக் படமாக அமைந்துவிட்டது அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்.

இன்பநிதி கையால் சம்பளம்: இது ஒருபக்கம் இருக்க 40 வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையில் அனுபவத்தை வைத்திருக்கும் இரண்டு சூப்பர் சீனியர்கள்; ரொம்பவே ஜூனியரான இன்பநிதி தயாரிப்பில் நடிப்பதை சிலர் விவாதமாக்கி, கிண்டல் செய்துவருகிறார்கள். அவர்கள் இன்பநிதி கையால் சம்பளம் வாங்கும் நிலைமைக்கு சென்றுவிட்டார்கள் எனவும் பேசுகிறார்கள். பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்கூட தனது எக்ஸ் பக்கத்தில், அவர்கள் இணையும் படம் பற்றிய செய்தியை பகிர்ந்து, "AVM நிறுவனம், பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம் படங்களில் நடித்து உயர்ந்த இரு மாபெரும் நடிகர்கள் தற்போது இன்பநிதி தயாரிப்பில் நடிக்கிறார்கள்" என குறிப்பிட்டிருக்கிறார்.

இதையெல்லாம் பார்த்த இன்பநிதியின் ஆதரவாளர்களோ, இத்தனை சின்ன வயதில் ஏன் பெரிய ஸ்டார்களை படம் தயாரிக்கக்கூடாது. இள வயதில் மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் ஏராளமானோர் உலகத்தில் இருக்கிறார்கள். அதனால் இதையெல்லாம் கிண்டல் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை என பதிலடி கொடுத்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X