45 ஆண்டுகளுக்குப்பின் 2 ஜாம்பவான்கள்.. ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் மாஸ் அப்டேட்!
சென்னை: தமிழ்த் திரையுலகின் முதன்மை நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தை "ரெட் ஜெய்ண்ட் மூவிஸ்" நிறுவனம் தயாரிக்கின்றது. இந்தப் படத்தை, இயக்குநர் நெல்சன் இயக்குவதாகவும், அதற்கான புரோமோ படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக வெளியாகி இருக்கும் நிலையில், படம் குறித்த மாஸ் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
ரஜினி,கமல்: இந்த நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு நேற்று தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், நாளை மதியம் 12.07 மணிக்கு அதிரடியாக அப்டேட் ஒன்று வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் போஸ்டரில் 21.02.2026 என தேதி குறிப்பிடப்பட்டுள்ளதால், வரும் சனிக்கிழமை அதாவது பிப்ரவரி 21ந்தேதி இந்தப் படத்தின் புரோமோ வீடியோ வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே சற்றுமுன் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தின் வீடியோ நாளை 12.7க்கு வெளியாகும் என் புது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் தங்க வாட்ச் அணிந்த ஒரு கையும், மோதிரம் அணிந்த ஒரு கை என ரஜினி, கமல் இருவரின் கை தெரிகிறது. தற்போது வெளியாகி இருக்கும் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாஸ் அப்டேட்: ரஜினியின் பிறந்த நாள் டிசம்பர் 12ந் தேதி, கமலின் பிறந்த நாள் நவம்பர் 7ந் தேதி என்பதால், இருவரின் பிறந்த நாளை குறிக்கும் வகையில் நாளை படத்தின் ப்ரோவை படக்குழு சரியாக 12.7 மணிக்கு வெளியிட உள்ளது. அந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இருவரும் அவர்களது பொற்காலமான 1980களின் லுக்கில் தோன்ற இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், நெல்சன் திலீப்குமாரின் திரைப்படம் போல, நகைச்சுவை கலந்த ஆக்ஷன் திரைப்படமாக இப்படம் உருவாக இருப்பதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. 45 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி - கமல் இரண்டு ஜாம்பவான்கள் இணைந்து நடிக்கும் படத்தினை காண இரு ரசிகர்களும் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications