மீண்டும் கை கோர்க்கும் ரஜினி, கமல்.. என்ன விஷயம் தெரியுமா? ரசிகர்களுக்கு செம ட்ரீட் வெயிட்டிங்!
சென்னை: நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் மீண்டும் ஒரு பெரிய விஷயத்துக்காக இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கமல்ஹாசன் 60 ஆண்டுகள் சினிமாவில் அசத்தலாக கடந்து இன்றளவும் விக்ரம் படம் மூலம் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக கெத்துக் காட்டி வருகிறார்.
ரஜினிகாந்த் 47 ஆண்டுகள் திரையுலகில் இன்னமும் முடிசூடா மன்னனாக கோலோச்சி வருகிறார். ஜெயிலர், லால் சலாம் மற்றும் தலைவர் 170 என கைவசம் மூன்று படங்களை வைத்திருக்கிறார்.

3 படங்கள் வரிசையாக
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாக உள்ளது. தர்பார், அண்ணாத்த படங்கள் சொதப்பிய நிலையில், ஜெயிலர் மற்றும் லால் சலாம் என வெயிட்டு காட்ட காத்திருக்கிறார் ரஜினிகாந்த். மேலும், ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் தலைவர் 170 படமும் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.

விக்ரம் வெற்றி
இன்னொரு பக்கம் கமல்ஹாசன் 4 ஆண்டுகள் கழித்து விக்ரம் படத்தை கொடுத்து 400 கோடிக்கும் வசூல் செய்து மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்து விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களையே பாக்ஸ் ஆபிஸில் மிரள வைத்து விட்டார். அடுத்து ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம் என கைவசம் பல படங்களை வைத்துள்ளார்.

ஒன்றாக இணைந்து
ஆரம்பத்தில் ஒன்றாக இணைந்து நடித்த கமல் மற்றும் ரஜினிகாந்த் அதன் பிறகு ஆளுக்கொரு ரூட்டுக்கு சென்று நடிப்பில் அசத்தினர். இந்நிலையில், கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் ஆடியோ லாஞ்சுக்காக ஒன்றாக இணைந்து நிகழ்ச்சியையே பிரம்மாண்டமாக மாற்றினர்,

பொன்னியின் செல்வன் 2 ஆடியோ லாஞ்ச்
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படம் அடுத்த மாதம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அந்த படத்தை ப்ரோமோட் செய்யும் விதமாக மார்ச் இறுதியில் பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா ஏ.ஆர். ரஹ்மான் தலைமையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த முறையும்
மீண்டும் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் பொன்னியின் செல்வன் 2 ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சிக்கும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க லைகா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஜினிகாந்த் மற்றும் கமல் இருவருமே லைகா நிறுவன தயாரிப்பு படங்களில் நடித்து வரும் நிலையில், கண்டிப்பாக இருவரும் பங்கேற்பார்கள் என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒரு மாசம் ப்ரோமோஷன்
மார்ச் இறுதி முதல் ஏப்ரல் இறுதியில் படம் வெளியாவதற்கு ஒரு மாத காலம் வரை பொன்னியின் செல்வன் 2 படத்திற்கான ப்ரோமோஷன்களுக்கு இயக்குநர் மணிரத்னம் மற்றும் லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல் பாகமே 500 கோடி வசூல் செய்த நிலையில், இரண்டாம் பாகம் 700 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











