Maamannan - ரஜினிகாந்த், கமல்ஹாசனை வளைத்து போட்ட மாமன்னன் உதயநிதி - சூப்பர் அப்டேட்

சென்னை: Maamannan (மாமன்னன்) உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியிருக்கும் மாமன்னன் படத்தின் லேட்டஸ்ட் தகவல் கசிந்திருக்கிறது.

இயக்குநர் ராமிடம் உதவியாளராக இருந்து பின்னர் அவரிடம் உதவி இயக்குநராக மாறியவர் மாரி செல்வராஜ். அதுமட்டுமின்றி தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் உள்ளிட்ட புத்தகங்களை எழுதி எழுத்தாளராகவும் ஜொலித்தவர். அதுமட்டுமின்றி ராம் இயக்கிய கற்றது தமிழ் படத்தில் ஒரு காட்சியிலும் நடித்திருக்கிறார். ராமுக்கு மிக மிக நெருக்கமானவரும் மாரி செல்வராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth and Kamal Haasan will attend the maamannan audio release function

பரியேறும் பெருமாள்: பல வருடங்கள் ராமிடம் உதவி இயக்குநராக இருந்து பரியேறும் பெருமள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மாரி செல்வராஜ். கதிர், யோகி பாபு, கயல் ஆனந்தி, மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது. காதலையும், அதன் ஊடாக நடக்கும் சாதிய அட்டூழியங்களையும் பொட்டில் அடித்தாற்போல் படம் பேசியிருந்தது.

கவனம் ஈர்த்த மாரி செல்வராஜ்: படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் படத்திலேயே மாரி செல்வராஜ் தான் எவ்வளவு தேர்ந்த படைப்பாளி என்பதை நிரூபித்துவிட்டார் என்றும், சென்சிட்டிவ் விஷயத்தை தொட்டு அதை மிக நேர்த்தியாக படைத்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர். குறிப்பாக அந்தப் படம் முடியும்போது அவர் வைத்த க்ளைமேக்ஸ் ஷாட் படம் வெளியானபோது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று மாரி செல்வராஜ் மீது பலரது கவனத்தை திருப்பியது.

Rajinikanth and Kamal Haasan will attend the maamannan audio release function

கர்ணன் மாரி: முதல் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். கொடியங்குளத்தில் எளிய மக்கள் மீது அதிகாரவர்க்கத்தினர் நடத்திய அராஜகத்தை மையமாக வைத்து உருவாகியிருந்த அந்தப் படம் ஹிட்டானாலும் பரியேறும் பெருமாளில் இருந்த அடர்த்தி இந்தப் படத்தில் இல்லை என்ற விமர்சனத்தையும் சந்தித்தது. அப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். இருப்பினும் இரண்டு படங்களிலேயே மாரி செல்வராஜ் முன்னணி இயக்குநராகிவிட்டார்.

மாமன்னன்: இப்படிப்பட்ட சூழலி உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். இதில் வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இதில் வடிவேலுவுக்கு முக்கியமான கதாபாத்திரம் என்றும், வழக்கமான பாணியில் வடிவேலு இதில் இருக்கமாட்டார் என்றும் படத்தின் போஸ்டர்களை பார்க்கும்போது தெரிந்துகொள்ள முடிகிறது

Rajinikanth and Kamal Haasan will attend the maamannan audio release function

ரஜினி, கமல் ஒரே மேடையில்: இந்நிலையில் படமானது ஜூன் 29ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ஜூன் ஒன்றாம் தேதி ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த விழாவில் ரஜினிகாந்த்தையும், கமல் ஹாசனையும் கலந்துகொள்ள வைக்க உதயநிதி ஏற்பாடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் கடைசியாக பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஒன்றாக கலந்துகொண்டிருந்தனர். இதற்கிடையே உதயநிதி ஸ்டாலினுக்கு மாமன்னன்தான் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X