டிவிட்டரை அதிரவிடும் ரஜினி - கமல் ரசிகர்கள்.. இந்திய அளவில் ட்ரென்டிங்கில் டாப்!

சென்னை: ரஜினி மற்றும் கமலின் ரசிகர்கள் இடையே நடக்கும் போட்டியால் டிவிட்டர் களம் திக்கு முக்காடி வருகிறது.

நடிகர்களுக்குள் போட்டிகள் இருக்கிறதோ இல்லையோ ரசிகர்களுக்குள் சமூக வலைதளங்களில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. நடிகர்களுக்காக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சண்டை போட்டுக் கொள்வது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.

கடந்த சில நாட்களாக அஜித் - விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் ஹீரோக்களுக்கு ஆதரவாக ஹேஷ்டேக்கை கிரியேட் செய்து ட்ரெட்டாக்கினர். இதனால் சமூக வலைதளங்கள் திணறின.

கமலின் 60 வருடங்கள்

கமலின் 60 வருடங்கள்

இந்நிலையில் இன்று டிவிட்டரில் ரஜினி - கமல் ரசிகர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. நடிகர் கமல்ஹாசனின் களத்தூர் கண்ணம்மா படம் திரைக்கு வந்து இன்றுடன் 60 ஆண்டுகள் ஆகிறது.

ஆகஸ்ட் 12

ஆகஸ்ட் 12

களத்தூர் கண்ணம்மா படத்தில் நடிகர் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அந்தப் படம் 1960ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி திரைக்கு வந்தது.

ரசிகர்கள் போட்டி

ரசிகர்கள் போட்டி

அதனை கொண்டாடும் வகையில் கமலின் ரசிகர்கள் #60PathBreakingYrsOfKamal என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்டாக்கினர். இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறைக்கு வந்து 44 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு அவரது ரசிகர்கள் #44YearsOfRajinismManiaBegins என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்டாக்கி வருகின்றனர்.

திணறும் டிவிட்டர்

திணறும் டிவிட்டர்

இரு நடிகர்களின் ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு அந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி டிவிட்டி வருகின்றனர். ஒரே நேரத்தில் இருவரும் ட்ரென்ட்டாகியுள்ளதால் டிவிட்டர் சமூக வலைதளம் திணறி வருகிறது.

அர்ப்பணிப்பு

சினிமா மீது அவருக்குள்ள ஆர்வமும் அர்ப்பணிப்பும் தான் யாரும் தொடாத உச்சத்தை அவரை எட்ட வைத்துள்ளது என்கிறார் ரஜினியின் இந்த ரசிகர்.

தெய்வப்பிறவி

தென்னிந்திய சினிமாவை ஆளும் ஒரு எளிய மனிதர் அவர் ஒரு தெய்வப்பிறவி என்று கூறுகிறார் ரஜினியின் தீவிர ரசிகரான இவர்.

உலக அடையாளங்கள்

தமிழ் சினிமாவின் உலக அடையாளங்கள். புகழிலும் சரி வசூலிலும் சரி என்று கூறுகிறார் இந்த ரசிகர்.

வரலாற்று சோகம்

திரைக்கு வராமலேயே அதிக எதிர்பார்ப்பு ஏற்படுத்திய ஒரே படம். எடுத்தவரை வந்த ட்ரெய்லர், ஈடில்லா, மிரட்டல் ரகம்! இது நிகழாதது வரலாற்றுச்சோகம் என்று மருதநாயகம் படம் குறித்து கூறிகிறார் கமலின் ரசிகரான இவர்.

இந்தியளவில் டாப்

இந்தியளவில் டாப்

இதனால் #44YearsOfRajinismManiaBegins என்ற ரஜினி ரசிகர்களின் ஹேஷ்டேக் இரவு 8.30 மணி நிலவரப்படி 95 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிவிட்டுகளுடன் இந்தியளவில் முதலிடத்திலும், #60PathBreakingYrsOfKamal என்ற கமலின் ஹேஷ்டேக் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிவிட்டுகளுடன் இந்தியளவில் இரண்டாவது இடத்திலும் ட்ரென்டிங்கில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X