இப்படி ஒரு மனைவி கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்.. ரஜினிகாந்த் வீட்டில் இன்னைக்கு சூப்பர் விசேஷம்!
சென்னை: சூப்பர் ஸ்டார் என்று இந்திய திரையுலகமே கொண்டாடி வரும் நடிகர் ரஜினிகாந்துக்கு பக்க துணையாக இத்தனை ஆண்டுகள் கூடவே இருப்பவர் என்றால் அது அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தான்.
சமீபத்தில், அண்ணன் மற்றும் அண்ணன் மகனின் 80வது மற்றும் 60வது திருமண விழாக்களில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், இன்று தனது திருமண நாளை கொண்டாடி வருகிறார்.
ரஜினிகாந்தின் திருமண நாளை அறிந்த ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் மற்றும் லதா ரஜினிகாந்துக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
இந்திய திரையுலகில் வசூல் மன்னனாக 72 வயதிலும் மாஸ் காட்டி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். பில்லா, அண்ணாமலை, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா, சந்திரமுகி, எந்திரன், 2.0, கபாலி என ஏகப்பட்ட இண்டஸ்ட்ரி ஹிட் படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்தவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது ஸ்டைலை காப்பி அடிக்காத இளம் நடிகர்களே இந்தியளவில் இல்லை என சொல்லும் அளவுக்கு அனைவரது ஃபேவரைட் ஸ்டாராக 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.

42வது திருமண நாள்
1981ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி திருப்பதியில் நடிகர் ரஜினிகாந்துக்கும் லதா ரஜினிகாந்துக்கும் திருமணம் நடைபெற்று இன்றுடன் 42 ஆண்டுகள் ஆகின்றன. தனது 42வது திருமண நாளை குடும்பத்தினருடன் இன்று கொண்டாடி வருகிறார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த்துக்கு ஐஸ்வர்யா மற்றும் செளந்தர்யா என இரு மகள்கள் உள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். மகள்கள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் தனது திருமண நாளை கொண்டாடி வருகிறார் ரஜினிகாந்த்.

ரசிகர்கள் வாழ்த்து
சூப்பர் ஸ்டாரின் திருமண நாள் இன்று என தெரிந்ததும் சமூக வலைதளங்களில் ரஜினி ரசிகர்கள் அவரது திருமண நாள் புகைப்படங்கள் மற்றும் சமீபத்தில் லதா ரஜினிகாந்த் உடன் பெங்களூருவில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் தியான நிலையத்தில் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டது உள்ளிட்ட புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

இப்படியொரு மனைவி கிடைக்க கொடுத்து வைத்திருக்கணும்
சமீபத்தில் நடிகர் ஒய்ஜி மகேந்திரனின் நாடக விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த், சரக்கு, நான்வெஜ் இல்லாமல் தனக்கு நாளே ஓடாது என்றும் ஆனால், என்னை இத்தனை ஆண்டுகளாக அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி, நடமாட வைத்திருப்பதே என் மனைவி தான் என வெளிப்படையாக பேசி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருந்தார். இப்படியொரு மனைவி கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் என ரசிகர்கள் பாராட்டி இருந்தனர்.

அவசரமான உலகில்
சமீப காலமாக சினிமா துறையில் மட்டுமின்றி சாமானியர்கள் மத்தியிலும் அதிகப்படியான விவாகரத்து நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. சின்ன சண்டை வந்தாலும், கணவன் மனைவி இருவரும் பிரிவதை தவிர வேறு வழி இல்லை என நினைத்து விடுகின்றனர். பொறுமை, சகிப்புத் தன்மை, உண்மையான காதல் என எதுவும் இல்லாமல் வாழ்பவர்கள் மத்தியில் 42வது திருமண விழாவை கொண்டாடுவதை பார்க்க எல்லாம் கொடுத்து வைத்திருக்கணும் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications