ஊர்வசி ரவுதேலாவை வாழ்த்திய தலைவர்... எதற்குன்னு தெரியுமா

சென்னை : சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி லெஜன்ட் சரவணன், தனது நிறுவனத்தின் விளம்பரங்களில் பிரபல ஹீரோக்களை பயன்படுத்தாமல் தானே நடித்து, தமிழ் மக்களிடம் அறிமுகமானவர். பல விளம்பரங்களில் இவர் நடித்துள்ளார். தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் அறிமுகமாக உள்ளார்.

டைரக்டர் ஜோசப் டி சமி மற்றும் ஜெரால்டு ஆரோக்கியம் இயக்கி வரும் பெயரிடப்படாத இந்த படத்தை சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியே தயாரிக்கிறார். சையின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகி வரும் இந்த படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம்.

அண்ணாச்சிக்கு ஜோடியாக ஊர்வசி

அண்ணாச்சிக்கு ஜோடியாக ஊர்வசி

இந்த படத்தில் அண்ணாச்சிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுதேலா நடிக்கிறார். இவர் 2015 ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றவர். மியூசிக் வீடியோக்கள், வெப் சீரிஸ் என பலவற்றிலும் நடித்துள்ளார் ஊர்வசி. கன்னடம், பெங்காலி மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் ஊர்வசி.

கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்தவர்

கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்தவர்

இந்தியில் பல படங்களில் நடித்துள்ள ஊர்வசி, தற்போது தமிழிலும் அறிமுகமாக உள்ளார். ஆனால் இந்த படம் ரிலீசாவதற்கு முன்பே தமிழ் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாகி விட்டார் ஊர்வசி. இதற்கு காரணம் அவரது கவர்ச்சி தான்.

ரசிகர்களை திணறடிக்கும் ஊர்வசி

ரசிகர்களை திணறடிக்கும் ஊர்வசி

கவர்ச்சி ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் ஊர்வசி. இவர் பகிரும் ஃபோட்டோக்கள், வீடியோக்களுக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்து, அவை வைரலும் ஆகின்றன.

வாழ்த்து சொன்ன தலைவர்

வாழ்த்து சொன்ன தலைவர்

இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோவில் பேசிய ஊர்வசிக்கு, அவர் தமிழில் அறிமுகமாக உள்ளதற்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்படி வாழ்த்தியவர்களில் லதா ரஜினிகாந்த்தும் ஒருவர். ஊர்வசியை ரஜினியும் அழைத்து, தமிழில் அறிமுகமாவதற்கு வாழ்த்தியதாக கூறப்படுகிறது.

இத விட வேற என்ன வேணும்

இத விட வேற என்ன வேணும்

இது பற்றி ஊர்வசி தனது சமூக வலைதள பதிவில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த்தும் வாழ்த்தி விட்டனர். இதை விட வேறு என்ன வேணும். ஊர்வசி ரவுதேலா பவுன்டேஷனின் Peace for Children அமைப்பில் லதா ரஜினிகாந்துடன் இணைய இனியும் காத்திருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

அமலாபால் ரோலில் ஊர்வசி

அமலாபால் ரோலில் ஊர்வசி

அண்ணாச்சி படத்தில் மட்டுமல்ல தற்போது, ரன்தீப் ஹுடாவிற்கு ஜோடியாக இன்ஸ்பெக்டர் அவினாஷ் என்ற வெப் சீரிஸ், தெலுங்கு மற்றும் இந்தியில் தயாராகும் பிளாக் ரோஸ் படம் ஆகியவற்றிலும் ஊர்வசி நடித்து வருகிறார். திருட்டுப் பயலே 2 படத்தின் இந்தி ரீமேக்கிலும் ஊர்வசி தான் நடிக்கிறாராம். தமிழில் அமலாபால் நடித்த ரோலில் இந்தியில் ஊர்வசி நடிக்க உள்ளார்.

டிரஸ் விலை இவ்வளவா

டிரஸ் விலை இவ்வளவா

ஊர்வசி சமீபத்தில் ஃபோட்டோ ஒன்றையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. Varsace Baby என்ற மியூசிக் வீடியோவில் நடித்தார். இந்த 6 நிமிட வீடியோவிற்கான ஊர்வசி அணிந்திருந்த டிரஸின் மதிப்பு ரூ.15 கோடியாம். இந்த டிரஸை சர்வதேச டிசைனர் கடந்த ஓராண்டாக உருவாக்கினாராம்.

இவ்வளவு காஸ்ட்லியா

இவ்வளவு காஸ்ட்லியா

அதே போல் பிரெஞ்ச் மற்றும் இத்தாலி நகைக்கடை விளம்பரம் ஒன்றிற்காக ஊர்வசி பிரேஸ்லெட் ஒன்றை அணிந்து வந்தார். தங்கம் மற்றும் வைரத்தால் உருவாக்கப்பட்ட இதன் விலை சுமார் ரூ.70 லட்சமாம். ஊர்வசி பகிர்ந்த இந்த ஃபோட்டோ வைரலானது. அதே போல் சமீபத்தில் தனது தோழி ஒருவரின் திருமண மெகந்தி நிகழ்ச்சிக்கு ஊர்வசி அணிந்து வந்த பட்டோலா புடவையின் விலை ரூ.5 லட்சமாம். அதற்கு மேட்சாக அணிந்து வந்த பல வண்ணங்களால் ஆன பிளவுசின் விலை ரூ.4,25,500. அவர் போட்டு வந்த நகை மதிப்பு ரூ.24,50,000.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X