Thalaivar 171: சம்பளத்தை குறைத்த ரஜினிகாந்த்.. ஜெட் வேகத்தில் உயர்ந்த லோகேஷ் கனகராஜ் சம்பளம்!

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் தலைவர் 171 படத்துக்காக லோகேஷ் கனகராஜை ஒப்பந்தம் செய்துள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

இந்நிலையில், அந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்கப் போவதாகவும் பலத்த போட்டிக்கு மத்தியில் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலேயே நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டார் சூப்பர்ஸ்டார் என்கின்றனர்.

மேலும், அந்த படத்திற்காக லோகேஷ் கனகராஜுக்கு அதிக சம்பளத்தையும் ரஜினிக்கு குறைவான சம்பளமும் வழங்கப்படப் போவதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Rajinikanth and Lokesh Kanagaraj gets this much salary for Thalaivar 171

கமலுக்கு இந்த முறையும் டாட்டா: ரஜினிகாந்தின் படத்தை ராஜ்கமல் நிறுவனம் சார்பில் தயாரிக்க வேண்டும் என கமல்ஹாசன் தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில், அதற்கு இந்த முறையும் ரஜினிகாந்த் பிடி கொடுக்கவில்லை என்கின்றனர்.

லியோ பட தயாரிப்பாளர் லலித், வாரிசு படத் தயாரிப்பாளர் தில் ராஜு உள்ளிட்ட பலர் தலைவர் 171 படத்தை தயாரிக்க போட்டிப் போட்ட நிலையில், கடைசியாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலே நடிக்கப் போவதாக ரஜினிகாந்த் முடிவு செய்து விட்டார் எனக் கூறுகின்றனர்.

மீண்டும் சன் பிக்சர்ஸ்: அண்ணாத்த, ஜெயிலர் படங்களை தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலேயே ரஜினிகாந்த் நடிக்கப் போகிறாராம்.

ரஜினிகாந்த் படத்தால் லாபத்தை பார்த்து வருவதால் தான் தொடர்ந்து ரஜினியை வைத்தே சன் பிக்சர்ஸ் படம் தயாரித்து வருகிறது என்கின்றனர். நெல்சனின் ஜெயிலர் படம் வசூலை வாரிக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தையும் கைப்பற்றி விட்டதாம் சன் பிக்சர்ஸ்.

Rajinikanth and Lokesh Kanagaraj gets this much salary for Thalaivar 171

லோகேஷ் கனகராஜ் சம்பளம்: விஜய்யின் லியோ படத்துக்கு 30 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் படத்துக்காக 40 கோடி ரூபாய் வரை அவரது சம்பளம் ஜெட் வேகத்தில் உயர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் அடுத்து லியோ என உயர்ந்து கொண்டே போகும் லோகேஷ் கனகராஜ் பாட்ஷா ஸ்டைலில் ஒரு கேங்ஸ்டர் படத்தை ரஜினிக்காக உருவாக்கி வருவதாக கூறுகின்றனர்.

Rajinikanth and Lokesh Kanagaraj gets this much salary for Thalaivar 171

சம்பளத்தை குறைத்த ரஜினி: லோகேஷ் கனகராஜின் சம்பளம் 40 கோடி அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், ரஜினிகாந்தின் சம்பளம் மட்டும் அதிரடியாக குறைத்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன. 130 கோடி சம்பளம் வாங்கி வரும் ரஜினிகாந்த் அடுத்த படத்திற்காக 115 கோடி ரூபாயாக தனது சம்பளத்தை சுமார் 15 கோடிகள் வரை குறைத்து விட்டார் என்றும் சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

சம்பளத்தை விட இந்த முறை படத்தின் வெற்றி தான் முக்கியம் என்றும் இயக்குநருக்கான சம்பளத்தை தயாரிப்பு நிறுவனம் அதிகரித்த நிலையில் தான் தனது சம்பளத்தை அவர் குறைத்துக் கொண்டார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

நெல்சன் உடன் ஜெயிலர், ஞானவேல் உடன் ஒரு படம், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் லால் சலாம் மற்றும் லோகேஷ் கனகராஜ் உடன் தலைவர் 171 என அடுத்தடுத்து வேறலெவல் மிரட்டலை கொடுக்க காத்திருக்கிறார் சூப்பர்ஸ்டார்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X