Rajinikanth Lokesh Kanagaraj Movie: ரஜினியை இயக்கப் போகும் லோகேஷ் கனகராஜ்.. அட தயாரிப்பாளர் இவரா?
சென்னை: கமல்ஹாசனுக்கு விக்ரம் எனும் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினியை வைத்து ஒரு படம் பண்ணப் போவது உறுதியாகி விட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் சீக்ரெட் மேட்டரை லீக் செய்துள்ளன.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் அழைப்பின் பெயரில் நேரிலேயே அவரை சென்று லோகேஷ் கனகராஜ் சந்தித்துள்ளதாகவும் சூப்பர்ஸ்டாருக்கு ஏற்ற ஒரு சூப்பரான கதையையும் சொல்லி இருப்பதாக கூறுகின்றனர்.
இந்நிலையில், அந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவில்லை என்றும் வேறு ஒரு பிரபல தயாரிப்பாளர் தான் அந்த படத்தை தயாரிக்கும் வாய்ப்பை தட்டித் தூக்கி உள்ளதாக ஹாட் அப்டேட்கள் வெளியாகி கோலிவுட்டையே வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கார்த்தி உடன் கைதி, விஜய்யுடன் மாஸ்டர் மற்றும் தற்போது லியோ படங்களை இயக்கி வருகிறார். கடந்த ஆண்டு கமல்ஹாசனுக்கு விக்ரம் எனும் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், அடுத்ததாக ரஜினிகாந்த் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகி ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில், அது தொடர்பாக கூடுதல் அப்டேட்டும் வெளியாகி உள்ளது.

சன் பிக்சர்ஸ் இல்லை: சன் பிக்சர்ஸ் அந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கப் போகும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கப் போவதில்லை என்கிற புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.
பலத்த போட்டிகளுக்கு இடையே லியோ படத்தை தயாரித்து வரும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோவின் தயாரிப்பாளர் லலித் குமார் தான் அந்த படத்தை தயாரிக்கப் போவதாக கூறுகின்றனர்.

வெயிட் பார்ட்டி: விஜய்யின் லியோ படத்தின் ஷூட்டிங்கை காஷ்மீரிலேயே 50 நாட்களுக்கு மேல் நடத்திய லலித் தான் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தையும் தயாரிக்கப் போகிறாராம். மேலும், சென்னையில் 100 கோடி ரூபாய் செலவில் பெரிய மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றையும் லலித் கட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சன் பிக்சர்ஸ், லைகா நிறுவனம் உள்ளிட்ட பெரிய தயாரிப்பு நிறுவனங்களுடன் போட்டிப் போடும் அளவுக்கு லலித் தன்னை உயர்த்திக் கொண்டு வருகிறார் என்றும் லியோ படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸே பெரியளவில் நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்தின் படத்தையும் அவர் கைப்பற்றி விட்டால் வேறலெவலுக்கு லலித் சென்று விடுவார் என்கின்றனர்.
ரசிகர்கள் சண்டை இருக்காது: சூப்பர் ஸ்டார் டைட்டில் சர்ச்சை காரணமாக விஜய் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் இடையே சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் சண்டை வெடித்து வருகிறது. இந்நிலையில், லலித் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் அடுத்த படத்தில் நடிக்கப் போகிறார் என்கிற அறிவிப்பு மட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியானால், அதன் பின்னர் ரஜினிகாந்த் - விஜய் ரசிகர்கள் மத்தியில் நிலவி வரும் சமூக வலை தள சண்டை அப்படியே டோட்டலாக ஹாஃப் ஆகி விடும் என்றும் சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











