Coolie: ரஜினிகாந்தின் கூலி.. தீபாவளிக்கு வெளியாகிறதா? இணையத்தில் கசிந்த தகவல்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சத்யராஜ், அமீர்கான், உபேந்திரா, நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் பாங்காக் ஆகிய பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. இந்த தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ரஜினி நடித்த வேட்டையன் படத்தில், ரஜினியுடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, சர்வானந்த், மஞ்சுவாரியர், ரித்திகா சிங், துஷாரா, அபிராமி, கிஷோர், ரவிமரியா என பலர் நடித்திருந்தனர். இப்படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் அக்டோபர் மாதம் வெளியாகி நன்றாக கல்லா கட்டியது. இந்த படத்தை தொடர்ந்து, ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்திற்கு நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

rajinikanth coolie update

கூலி படத்தின் படப்பிடிப்பு: இப்படத்தில், பிரபல தெலுங்கு சினிமாவின் ஸ்டார் நடிகரான நாகார்ஜுனா சைமன் என்கின்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். ரஜினி மற்றும் சத்யராஜும் 38 ஆண்டுகளுக்கு பிறகு கூலி படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தில் சத்யராஜ் 'ராஜசேகர்' என்ற கதாபாத்திரத்திலும், கன்னட நடிகர் உபேந்திரா கூலி காலீஷா என்கிற ரோலில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அதே போல, ரஜினி, "தேவா" என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் பாங்காக் ஆகிய பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் நேற்று முன் தினம் தொடங்கி உள்ளது.

rajinikanth coolie update

அதிரடியான அறிவிப்பு: படத்தின் படப்பிடிப்பை ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் 80 சதவீகிதம் முடிவடைந்துவிட்டதாகவும், அவர் நடிக்க வேண்டிய மீதி காட்சிகள் இன்னும் இரண்டு வாரத்திற்குள் முடிவடைந்துவிடும் என்றுகூறப்படுகிறது. அதன் பிறகு படத்தின் அடுத்த கட்ட பணிகள் தொடங்கப்பட்டு படம் ஆகஸ்ட் மாதம் 10ந் தேதி அல்லது தீபாவளி பண்டிகைக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலால் ரஜினியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது-

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X