கோகுலம் ஸ்டுடியோவில் ரஜினி - நயன் பங்கேற்கும் அண்ணாத்த படப்பிடிப்பு? தீயாய் பரவும் தகவல்!
சென்னை: கோகுலம் ஸ்டுடியோவில் ரஜினிகாந்த் நயன்தாரா சம்பந்தப்பட்ட அண்ணாத்த படத்தின் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் என ஒரு பெரும் நடிகர் பட்டாளமே நடிக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது முதலே ஆன் ஆஃப் மோடில் இருந்து வருகிறது. படப்பிடிப்பு தொடங்குவதும் நிறுத்தப்படுவதுமாய் உள்ளது.

லாக்டவுன்
முதல் ஷெட்யூல் தொடங்கியதுமே, லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன்பிறகு இரண்டாவது கட்ட ஷூட்டிங் லாக்டவுனுக்கு பிறகு ரிலாக்ஸேஷன் நேரத்தில் ஹைத்ராபாத்தில் தொடங்கியது.

உடல்நலக்குறைவு
ஆனால் அப்போது படக்குழுவில் இருந்த சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து ரஜினிக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பிரமாண்ட செட்
இந்நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பை தொடங்கும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இதற்காக சென்னையை அடுத்த ஈவிபி பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.

கோகுலம் ஸ்டுடியோ
இந்நிலையில் கோகுலம் ஸ்டுடியோவில் ரஜினிகாந்த் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்படும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











