twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி, விஜய் பட தயாரிப்பாளரும் பிரபல இயக்குநருமான டி. ராமா ராவ் காலமானார்.. சோகத்தில் திரையுலகம்

    |

    சென்னை: தமிழில் வெளியான பல சூப்பர் ஹிட் படங்களை தெலுங்கில் ரீமேக் செய்த பழம்பெரும் இயக்குநர் டி. ராமா ராவ் இன்று காலை சென்னையில் காலமானார்.

    தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பல முன்னணி நடிகர்களின் படங்களை இவர் தயாரித்து உள்ளார்.

    உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த டி. ராமா ராவ் சிகிச்சைப் பலனின்றி காலமானது திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது.

    ஆயிரம்தான் கவி சொன்னேன்...நாட்டுபடு தேறல் 2ம் பாகம்...எஸ்பிபி.,க்காக உருகும் வைரமுத்து ஆயிரம்தான் கவி சொன்னேன்...நாட்டுபடு தேறல் 2ம் பாகம்...எஸ்பிபி.,க்காக உருகும் வைரமுத்து

    டி ராமா ராவ் காலமானார்

    டி ராமா ராவ் காலமானார்

    சென்னையில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் இயக்குநரும் பிரபல தயாரிப்பாளருமான டி. ராமா ராவ் சிகிச்சை பலனின்றி இன்று (ஏப்ரல் 20) காலை காலமானார். அவருக்கு வயது 83. 70க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களை இயக்கி உள்ள இவர், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் பல படங்களை தயாரித்தும் உள்ளார்.

    நவராத்திரி பட இயக்குநர்

    நவராத்திரி பட இயக்குநர்

    தமிழில் சிவாஜி, சாவித்ரி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த நவராத்திரி படத்தை தெலுங்கில் சாவித்ரி மற்றும் நாகேஷ்வர ராவை வைத்து இயக்கி இயக்குநராக அறிமுகமானாவர் இயக்குநர் டி. ராமராவ். 1966ம் ஆண்டு வெளியான நவராத்திரி படம் தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பிரம்மச்சாரி, மஞ்சி மித்ருலு, சூப்ருதுது உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர், 1975ம் ஆண்டு என்.டி. ராமா ராவை வைத்து எமகோலா எனும் படத்தை தெலுங்கில் இயக்கினார்.

    இந்தி படங்கள்

    இந்தி படங்கள்

    அதே எமகோலா படத்தை 1979ம் ஆண்டு இந்தியில் லோக் பரலோக் எனும் டைட்டிலில் ஜித்தேந்திரா மற்றும் ஜெய பிரதாவை வைத்து இயக்கி ஹிட் கொடுத்தார். மேலும், தமிழில் வெளியான மெளன கீதங்கள், அவள் ஒரு தொடர்கதை, சட்டம் என் கையில், சட்டம் ஒரு இருட்டறை, மூன்று முகம், கோபுரங்கள் சாய்வதில்லை, சம்சாரம் அது மின்சாரம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் தமிழ் படங்களை இந்தியில் அப்பவே ரீமேக் செய்தவர் டி. ராமா ராவ்.

    ரீமேக் இயக்குநர்

    ரீமேக் இயக்குநர்

    தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இவர் இயக்கிய முக்கால்வாசி படங்கள் தமிழ் படங்களின் ரீமேக் தான் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிக்கு தண்டனை படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தார். புலன் விசாரனை, சேரன் பாண்டியன், நாட்டாமை என பல படங்களை இந்தியில் ரீமேக் செய்துள்ளார். இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் திரையுலகை ஆட்சி செய்தவர் இவர்.

    ரஜினி, விஜய் படங்கள்

    ரஜினி, விஜய் படங்கள்

    அமிதாப் பச்சன் நடித்த ஆக்ரி ராஷ்டா எனும் இந்தி படத்தை தயாரித்த ராமா ராவ் பல இந்தி படங்களை தயாரித்துள்ளார். தமிழில் ரஜினிகாந்தின் நான் சிகப்பு மனிதன், அதிசய பிறவி உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். விஜய்யின் யூத், விக்ரமின் தில், ஜெயம் ரவியின் உனக்கும் எனக்கும், விஷாலின் மலைக்கோட்டை உள்ளிட்ட சில தமிழ் படங்களை தயாரித்துள்ள இத்தனை பெரிய சினிமா ஆளுமை இன்று மறைந்திருப்பதை அறிந்து ஒட்டுமொத்த திரையுலகமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. பல பிரபலங்கள் டி ராமா ராவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இறுதி சடங்கு

    இறுதி சடங்கு

    சென்னை, தி.நகர் பாலாஜி அவென்யூ முதல் தெருவில் வசித்து வந்த டி. ராம ராவ் வயது மூப்பு காரணமாக அதிகாலை 12.30 மணியளவில் இறந்தார். இன்று, மாலை 4 மணிக்கு கண்ணம்மாபேட்டை மயானத்தில் அவரது இறுதி சடங்கு நடைபெறுகிறது. இவருக்கு தாதினேனி ஜெயஸ்ரீ என்ற மனைவியும், சாமுண்டீஸ்வரி, நாக சுசீலா, அஜய் ஆகிய குழந்தைகளும் உள்ளனர்.

    English summary
    Rajinikanth and Vijay movie Producer and Veteran Director T Rama Rao passes away. He directs Several Tollywood and Bollywood films.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X