twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.. அரசியல் கட்சி தொடங்கவில்லை.. நடிகர் ரஜினிகாந்த் திடீர் அறிவிப்பு!

    By
    |

    சென்னை: நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று திடீரென அறிவித்துள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் இப்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 168 வது படம்.

    இதில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உட்பட பலர் நடிக்கின்றனர். இமான் இசை அமைக்கிறார்.

    ராமோஜி ராவ்

    ராமோஜி ராவ்

    சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படத்தின் 2 ஆம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவடைந்து விட்டது. மார்ச் மாதம் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட இருந்த நிலையில், கொரோனா பரவல் தீவிரமடைந்தது. இதனால், நாடு முழுவதும் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது.

    அரசியலில் ஈடுபட

    அரசியலில் ஈடுபட

    இதன் படப்பிடிப்பை கொரோனா பரவலுக்கு முன்பே தொடங்கி 40 சதவீதம் முடித்து விட்டனர். அடுத்த மாதம் தனி கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் தயாராகி வருவதால் அதற்கு முன்பாக தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடித்து விடும்படி படக்குழுவினரிடம் அறிவுறுத்தி இருந்தாராம்.

    படப்பிடிப்பில் பங்கேற்பு

    படப்பிடிப்பில் பங்கேற்பு

    இதையடுத்து 9 மாதங்களுக்கு பிறகு கடந்த 14- ஆம் தேதி ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினர். இதில் ரஜினிகாந்த் பங்கேற்று நடித்து வந்தார். சில தினங்களுக்கு பிறகு நயன்தாராவும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ரஜினி, நயன்தாரா இணைந்து நடித்த காட்சிகளை படமாக்கினர்.

    கொரோனா பாதிப்பு

    கொரோனா பாதிப்பு

    ஆனால் எதிர்பாராத விதமாக படப்பிடிப்பில் பங்கேற்ற 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர் ரஜினிகாந்துக்கும், மற்ற படக்குழுவினருக்கும் பரிசோதனையில் தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. இருந்தாலும் ரஜினிகாந்த், தன்னை ஐதராபாத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

    மருத்துவமனை

    மருத்துவமனை

    இந்நிலையில் அவர் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா இல்லை என்றாலும் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருப்பதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக
    மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    பிரச்னை இல்லை

    பிரச்னை இல்லை

    அவர் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதாகவும் அவருக்கு மற்ற எந்த பிரச்சனையும் இல்லை என்று மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டது. பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று
    அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தான் கட்சி தொடங்கப் போவதில்லை என அவர் கூறியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    மன்னிக்க வேண்டும்

    மன்னிக்க வேண்டும்

    தன்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை என்றும் ரசிகர்களுக்கு மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும் தன்னை மன்னிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ, அதை செய்வேன் என்று கூறியுள்ளார்.

    English summary
    Actor Rajinikanth has announced that he is not going to start a political party.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X