தலைவர் 173லிருந்து வெளியேறிய சுந்தர்.சி.. தனுஷிடம் கதை வாங்க முடிவெடுத்த ரஜினி?.. ஓஹோ இது வேறயா
சென்னை: கூலி படத்துக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவரும் ரஜினிகாந்த்; இப்படத்துக்கு பிறகு கமல்ஹாசன் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் நடிப்பதாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் சுந்தர்.சி வெளியேறிவிட; புது இயக்குநரை தேடும் படலம் கிட்டத்தட்ட முடிவடைந்ததுவிட்டதாக கூறப்படும் சூழலில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கூலி குழியில் விழுந்ததால் ரஜினிகாந்த் பெரிய அப்செட்தான். அந்தப் படத்துக்கு பிறகு இப்போது அவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். முதல் பாகம் எப்படி பெரிய வெற்றியை பெற்றதோ அதேபோல் இதிலும் வெற்றியை சுவைத்திட வேண்டும் என்று ஒட்டுமொத்த படக்குழுவும் கடுமையாக உழைத்துவருவதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரம் கூறுகிறது.
தலைவர் 173: இதற்கிடையே ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் பரவின. ஆனால் அதில் ஒரு ட்விஸ்ட்டாக கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கிறார். தலைவர் 173 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை சுந்தர்.சி இயக்குவார் என்றும் அறிவிப்பு வெளியானது. இந்தத் தகவல் ரஜினியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத்தான் கொடுத்தது.

வெளியேறிய சுந்தர்: கண்டிப்பாக குடும்பங்கள் கொண்டாடும் ஒரு படமாக ரஜினியை வைத்து சுந்தர்.சி கொடுப்பார் என்று நம்பிக்கையோடு காத்திருந்தார்கள் ரசிகர்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் படத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார் சுந்தர்.சி. அவரது வெளியேற்றத்துக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும்; கதைதான் பிரதான காரணம் என்று திரைத்துறையினர் சொல்கிறார்கள்.
அடுத்த இயக்குநர் யார்?: சுந்தர் வெளியேறியதைத் தொடர்ந்து தலைவர் 173 படத்தை யார் இயக்குவார் என்ற கேள்விதான் அனைவரிடமும் எழுந்திருக்கிறது. பல பெயர்கள் அடிபட்டாலும்; பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் பரவின. இந்நிலையில் தனுஷிடம் ரஜினி கேட்டதாக புதிய தகவல் ஒன்றை வலைப்பேச்சு டீம் வெளியிட்டிருக்கிறது.
என்ன ஆனது?: அதாவது சில வருடங்களுக்கு முன்னர் ரஜினியிடம் தனுஷ் ஒரு கதை சொன்னாராம். அது ரஜினிக்கும் பிடித்துப்போக; சில காரணங்களால் அந்தப் படம் ஆரம்பிக்கப்படவில்லை. சூழல் இப்படி இருக்க தலைவர் 173 படத்திலிருந்து சுந்தர் வெளியேற; தனுஷ் சொன்ன கதை நியாபகம் வந்ததாம். உடனே அவரிடம் கதை இருக்கிறதா என்று கேட்க; அவரும் இருப்பதாக மேனேஜர் மூலம் சொல்லி அனுப்பினாராம். ஆனால் அதற்குள் ராம்குமார் சொன்ன கதை பிடித்துப்போக அவரையே இயக்குநராக லாக் செய்துவிட்டார்களாம்.


Click it and Unblock the Notifications











