அட்லீ படத்தில் ரஜினி நடிப்பது கன்பார்ம்..இணையத்தில் கசிந்த தகவல்!

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான அட்லீ, பாலிவுட்டில் அறிமுகமாகி ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால், பாலிவுட்டிலேயே செட்டிலாகிவிட்ட அட்லீ, தற்போது, சல்மான் கானை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உருவான நண்பன்,எந்திரன் ஆகிய படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. 'ராஜா ராணி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதைதொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறி, அட்லீ, இந்தியில் நடிகர் ஷாருக்கான், நயன்தாரா நடித்த 'ஜவான்' படத்தை இயக்கினார். பான் இந்திய திரைப்படமாக வெளியான இந்த படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

atlee rajini salman khan

பேபி ஜான்: முதல் படத்திலேயே பாலிவுட்டில் மாஸ் காட்டிய அட்லீ, தெறி படத்தை இந்தியில் பேபி ஜான் என்ற பெயரில் தயாரித்தார்.இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் சமந்தா ரோலிலும், வருண் தவான் விஜய் ரோலில் நடித்திருந்தனர். இந்தப் படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கடந்த டிசம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் பெரிய அளவில் பாக்ஸ் ஆஃபீஸில் வரவேற்பைப் பெறவில்லை. .150 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலக அளவில் ரூ.50 கோடியை மட்டுமே வசூலித்தது. இப்படத்தால் அட்லீக்கு பல கோடி நஷ்டம் என சொல்லப்படுகிறது.

அட்லீ பேட்டி: தற்போது பாலிவுட்டில் கடைவிரித்து இருக்கும் அட்லீ, சல்மான் கானை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்தி ஊடகம் ஒன்றுக்கு அட்லீ அளித்த பேட்டியில், நான் ரஜினியின் தீவிர ரசிகன், ரஜினி சாரின் வெறியன் என்று கூட சொல்லலாம். அவரை பார்த்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன், மேடையில் எப்படி பேசுவது, பிறரிடம் பண்பாக எப்படி நடந்து கொள்வது என நிறைய விஷயங்களை அவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

கண்டிப்பாக ரஜினியை வைத்து படம் எடுப்பேன்: அவர் நடித்த தளபதி திரைப்படத்தை பார்த்து வளர்ந்தவன் நான். ரஜினி சாருடன் 300 நாட்கள் எந்திரன் படப்பிடிப்பில் இருந்திருக்கிறேன். அவருக்கு என்னை நன்றாக தெரியும். என்னை எப்போதுமே கண்ணா என்று தான் அழைப்பார். எனக்கு இரண்டு, மூன்று முறை ரஜினி சாரை வைத்து படம் கேட்க வாய்ப்பு வந்தது ஆனால், அவர்கள் சொன்ன காலகட்டத்திற்குள் என்னால் தயாராக முடியவில்லை. சரியான கதை அமைந்தால் கண்டிப்பாக 100% நானும் ரஜினி சாரும் ஒன்றாக பணியாற்றுவோம் இதில், எந்தவிதமான மாற்று கருத்து இல்லை. கண்டிப்பாக என் இயக்கத்தில் ரஜினி சார் ஒரு படத்தில் நடிப்பார் என்றார். சல்மான் நடிக்கும் படத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக இணையத்தில் தகவல் பரவி வரும் நிலையில்,அட்லீ இவ்வாறு பேட்டி அளித்திருப்பதால்,அட்லீ படத்தில் ரஜினி நடிப்பது கன்பார்ம் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X