'ஐ' இசை வெளியீட்டு விழாவில் ஒருவரையொருவர் கண்டுகொள்ளாத அர்னால்ட், ரஜினி
சென்னை: ஐ பட இசை வெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் முகம் கொடுத்து பேசிக் கொள்ளவில்லையாம்.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ஐ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் திங்கட்கிழமை இரவு பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்நெக்கர் கலந்து கொண்டார்.

விழா பல மணிநேரம் தாமதமாக துவங்கியது. நிகழ்ச்சி துவங்கிய பிறகு அர்னால்ட் மேடையில் பேசிவிட்டு இசையை வெளியிடும் முன்பே கிளம்பிவிட்டார். ஐ இசை வெளியீட்டு விழாவில் அர்னால்டும், ரஜினிகாந்தும் கலந்து கொள்வது தான் பெரிதாக பேசப்பட்டது. ஆனால் விழாவில் அவர்கள் முகம் கொடுத்து பேசவில்லை.
மேடையில் அர்னால்ட் ரஜினியை பற்றி பேசவில்லை. அதே போன்று ரஜினியும் அர்னால்டை கண்டுகொள்ளவில்லை. இரண்டு பெரிய ஸ்டார்கள் ஒருவரையொருவர் கண்டுகொள்ளாதது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நிகழ்ச்சிக்கு வந்த ஷங்கர் முதலில் அர்னால்ட் அருகில் அமர்ந்ததில் ரஜினிக்கு வருத்தம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











