Coolie: காக்கா.. விஜய்யை சீண்டிய ரஜினி?.. ப்ளூ சட்டை மாறன் என்னங்க இப்படி எல்லாம் டீ-கோட் பண்ணியிருக்காரு!

சென்னை: தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்களுக்கு இடையில் சண்டைகள் வருகிறதோ இல்லையோ, அவர்களின் ரசிகர்களுக்கு இடையில் சண்டைகள் என்பது சகஜமானதாக மாறிவிட்டது. இந்த சண்டையில் நேரடியாக இரங்கவில்லை என்றாலும் நடிகர்கள் அதற்கு தீனி போடும் அளவுக்கு சில வேலைகளை அவ்வப்போது பார்த்து விடுகிறார்கள். அப்படியான சம்பவங்கள் எல்லாம் கடந்த காலத்தில் பல விஷயங்கள் நடைபெற்றுள்ளது.

குறிப்பாக கழுகு என்றால் ரஜினி, காக்கா என்றால் விஜய் என அவர்களுக்கு இடையில் நடக்கும் மறைமுகமான வார்த்தைப் போர் குறித்த பேச்சுகள் திரைத்துறையில் படங்களில் காட்சிகளாக, பாடல்களில் வரிகளாக இடம் பெற்று வருகிறது. இப்படி இருக்கும்போது கூலி படத்தின் டிரைலரின் கடைசியில் ரஜினிகாந்த் காக்காவின் சத்தத்தைக் கேட்டு பயப்படுவது போல நடிக்கிறார். லியோ படத்தில் கழுகைப் பார்த்து விஜய் என்னடா சௌக்யமா எனக் கேட்பார்.

Rajinikanth Attacks Vijay AT Coolie Trailer Says Blue Sattai Maran
Photo Credit:

வார்த்தைப் போர்: ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசுகையில் கழுகு, காக்கா கதை சொன்னார். அதேபோல் லியோ இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசுகையில் காக்கா, கழுகு எனக் கூறிவிட்டு சிரித்தார். இவையெல்லாம் இவர்கள் இருவருக்கும் இடையில் நடைபெற்ற வார்த்தை போர்கள் என ரசிகர்கள் மத்தியில் பேச்சுகள் உள்ளது. இந்நிலையில் கூலி படத்தின் டிரைலரில் இடம் பெற்ற வசனமான, "இந்த தேவாவை பத்தி தெரிஞ்சிருந்தும் எங்கிட்டயே விளையாடி இருக்க" என்ற வசனம் விஜய்யை அட்டாக் செய்யத்தான் இந்த வசனம் உள்ளது என ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார்.

ப்ளூ சட்டை மாறன்: அதாவது, "கூலி ட்ரைலரின் இறுதியில் காக்கா சத்தத்தை பார்த்து அதை கலாய்ப்பது போல நடித்துள்ளார் தலீவர்.‌ அதற்கு முன்பு வரும் வசனத்திலும் விஜய்யை சீண்டியுள்ளார்.'இந்த தேவாவை பத்தி தெரிஞ்சிருந்தும் எங்கிட்டயே விளையாடி இருக்க' என்பதுதான் அந்த வசனம். விஜய் மீதான‌ கோவமும், எரிச்சலும், பயமும் தெளிவாக தெரிகிறது. தேர்தலில் விஜய் ஜெயித்தாலும் இவருக்கு பிடிக்காது.

Rajinikanth Attacks Vijay AT Coolie Trailer Says Blue Sattai Maran
Photo Credit:

அஜித் டயலாக்: மீண்டும் நடிக்க வந்தாலும் இவருக்கு பிடிக்காது. செமத்தியாக Check and mate வைத்துள்ளார் விஜய். இதையெல்லாம் பார்த்தால் அவர்தான் கழுகு‌. இவர்தான் காக்கா. இனியாவது இப்படி புலம்புவதை நிறுத்துங்க தலீவரே" என குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் தற்போது வேகமாக பரவி வருகிறது. இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில் அஜித் டயலாக்கான எத்தனை நாளைக்குத்தான் நான் நல்லவனாவே நடிக்கிறது என்ற டயலாக்கையும் பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X