ரோகிணி தியேட்டர் ஓனர் மகன் திருமணம்.. மணமக்களுக்கு அட்சதை போட்டு வாழ்த்திய ரஜினிகாந்த்!

சென்னை: ரோகிணி தியேட்டர் ஓனர் பன்னீர் செல்வம் மகன் ரேவந்த் சரண் திருமணம் சென்னையில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. அந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்திய வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

சில நாட்களுக்கு முன்னர் தான் சென்னையில் நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த திருமணத்தில் கலந்துக் கொண்டும் நடிகர் ரஜினிகாந்த் மணமக்களை வாழ்த்தி இருந்தார்.

Rajinikanth attends and wishes Rohini Theater Owner son Rhevanth Charans wedding

படமும் முக்கியம் பழக்கமும் முக்கியம்: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல ஒரு சில சினிமா பிரபலங்கள் மட்டுமே படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும், முக்கியமான நிகழ்ச்சிகளில் மறுப்பு சொல்லாமல் தவறாமல் பங்கேற்று வருகின்றனர். சில நடிகர்கள் சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று விட்டால் வீட்டை மட்டுமல்ல நண்பர்கள், திரையுலகம், ரசிகர்கள் என அனைவரையும் மறந்து விடுவார்கள்.

ரோகிணி தியேட்டர் ஓனர் மகன் திருமணம்: சென்னை கோயம்பேட்டில் உள்ள ரசிகர்களின் கோட்டை என்றழைக்கப்படும் ரோகிணி தியேட்டர் ஓனரான பன்னீர் செல்வம் செட்டியாரின் மகன் ரேவந்த் சரண் திருமணம் சென்னையில் இன்று கோலாகலமாக நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலர் கலந்து கொள்ள பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அட்சதை போட்டு வாழ்த்திய ரஜினிகாந்த்: விஜயகுமார் பேத்தியின் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய ரஜினிகாந்த் இன்று நடைபெற்ற ரேவந்த் சரண் திருமணத்திற்கும் சென்று மணமக்களுக்கு அட்சதை போட்டு வாழ்த்தும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகின்றனர். தொடர்ந்து அனைத்து நிகழ்ச்சிகளிலும் வேட்டையன் படப்பிடிப்பை கவனித்துக் கொண்டே நடிகர் ரஜினிகாந்த் பார்த்து வருகிறார்.

விஜய்யின் தீவிர ரசிகர்: லியோ படத்தின் டிரெய்லர் ரோகிணி தியேட்டரில் திரையிடப்பட்ட போது விஜய் ரசிகர்கள் தியேட்டர் இருக்கைகளை சேதப்படுத்தினர். உடனடியாக விஜய் போன் போட்டு ஆறுதல் கூறினார் என்றும் எப்போதுமே தளபதி விஜய் தனக்கு ஆதரவாக இருப்பார் என ரேவந்த் சரண் பேட்டிகளில் பேசியுள்ளார். விஜய்யின் தீவிரமான ரேவந்தின் திருமணத்துக்கு விஜய் வந்தாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், அதுதொடர்பான எந்தவொரு புகைப்படங்களும் இதுவரை வெளியாகவில்லை.

வேட்டையன் படத்தில் பிஸி: லால் சலாம் படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், ரஜினிகாந்த் அடுத்ததாக லைகா தயாரித்து வரும் வேட்டையன் படத்தில் படுபிஸியாக உள்ளார். அந்த படத்தை விரைவில் முடித்து விட்டு தலைவர் 171 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணையவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X