முரட்டுக்காளை ரயில் ஃபைட்டை மறக்க முடியாது.. ஜூடோ ரத்தினத்துக்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த் பேட்டி

சென்னை: பழம்பெரும் சண்டை பயிற்சி இயக்குநர் ஜூடோ ரத்தினம் காலமான நிலையில், அவரது இறுதி சடங்கில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

ரஜினிகாந்தின் ஃபேவரைட் ஸ்டன்ட் மாஸ்டராக விளங்கியவர் ஜூடோ ரத்தினம். முரட்டுக்காளை, பாயும் புலி, பாண்டியன் என 46 ரஜினி படங்களில் அவர் பணியாற்றி உள்ளார்.

1200க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய ஜூடோ ரத்தினம் 20க்கும் மேற்பட்ட ஸ்டன்ட் மாஸ்டர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர்.

முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

பழம்பெரும் சண்டைப் பயிற்சியாளரான திரு. ஜூடோ ரத்னம் அவர்கள் (92) வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சண்டைப் பயிற்சியாளராகப் பணியாற்றி கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்ற திரு. ஜூடோ ரத்னம் அவர்கள், போக்கிரி ராஜா, தலைநகரம் போன்ற திரைப்படங்களில் நடிகராகவும் மிளிர்ந்தார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன் உள்ளிட்ட பெரும் நட்சத்திரங்களின் பல திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றவர் ஜூடோ ரத்னம் அவர்கள்.

அரசியலிலும்

அரசியலிலும்

பொதுவுடைமைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும் அவர் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. கலையுலகிலும் அரசியல் உலகிலும் சிறந்த பங்களிப்பை வழங்கி மறைந்துள்ள திரு. ஜூடோ ரத்னம் அவர்களின் மறைவால் வாடும் அவர்தம் குடும்பத்தார்க்கும் திரையுலக, அரசியல் உலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஃபேவரைட் சண்டை பயிற்சி இயக்குநரான ஜூடோ ரத்தினம் மறைவு செய்தியை அறிந்து வேதனையடைந்த நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.

சேஃப்டி தான் முக்கியம்

சேஃப்டி தான் முக்கியம்

ஹீரோக்களுக்கு மட்டுமில்லை, அவருடன் பணியாற்றும் ஸ்டன்ட் கலைஞர்களுக்கும் எந்தவொரு ஆபத்தும் நேராத அளவுக்கு பார்த்துக் கொள்ளும் தங்கமான மனிதர் ஜூடோ ரத்தினம். முதலில் சேஃப் தான் அவரை பொறுத்தவரையில் முக்கியம். மற்றவை எல்லாம் அதன் பிறகு தான் என அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் பேட்டி அளித்துள்ளார்.

முரட்டுக்காளை டிரெய்ன் ஃபைட்

முரட்டுக்காளை டிரெய்ன் ஃபைட்


முரட்டுக்காளை படத்தில் வித்தியாசமாக அவர் அமைத்த டிரெய்ன் ஃபைட் இப்போ வரைக்கும் பேசப்பட்டுக் கொண்டு இருக்கிறது. சூப்பர் சுப்புராயன் உள்ளிட்ட பல மாஸ்டர்களை உருவாக்கியவர். நல்லா 93 வயது வரை வாழ்ந்து விட்டு இறைவனடி சேர்ந்திருக்காரு.. அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என அஞ்சலி செலுத்தி விட்டு சென்றார் நடிகர் ரஜினிகாந்த்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X