அம்பானி மகன் திருமணம் மட்டுமல்ல.. லூலூ மால் நிர்வாகியின் மகள் திருமணத்துக்கும் சென்ற சூப்பர் ஸ்டார்!

சென்னை: இந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தின் ஷூட்டிங்கிற்கு சென்ற நாட்களுக்கு இணையாக அவர் திருமண விழாக்களில் பங்கேற்ற நாட்களும் இருக்கும் என்று கூறினால் அது மிகையாக இருக்காது என சினிமா வட்டாரத்தில் பரவலான பேச்சுகள் அடிபட்டு வருகின்றன.

அந்தளவுக்கு ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் திருமணங்கள், அயோத்தி கோயில் திறப்பு விழா, இமய மலை பயணம் என 73 வயதிலும் நடிகர் ரஜினிகாந்த் செம எனர்ஜியுடன் மும்பை முதல் கேரளா வரை பயணம் செய்துள்ளார்.

Rajinikanth wedding Vettaiyan

அம்பானி மகனான ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு முந்தைய விழா மார்ச் மாதம் நடைபெற்ற போதே தனது குடும்பத்தினருடன் சென்று பங்கேற்ற ரஜினிகாந்த் திருமண விழாவிலும் ஆட்டம் போட்டு அசத்திய வீடியோ காட்சிகள் தீயாக பரவின. இந்நிலையில், லூலூ மால் நிர்வாக இயக்குநர் எம்.ஏ. சலீமின் மகள் திருமணத்துக்கு சென்ற வீடியோ காட்சிகளும் இணையத்தில் வலம் வருகின்றன.

அர்ஜுன் மகள் முதல் அம்பானி மகன் வரை: நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் திருமணம், சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் திருமணம், விஜயகுமாரின் பேத்தி திருமணம், ஆனந்த் அம்பானியின் மகன் திருமணம் என இந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் அனைத்து சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் அன்பான அழைப்பை ஏற்று இல்லத் திருமண நிகழ்ச்சிகளுக்கு சென்று மணமக்களை வாழ்த்தி வந்தார்.

'லூலூ மால்' சலீம் மகள் திருமணம்: கேரளாவின் கோழிக்கோட்டில் நடைபெற்ற லூலு மாலின் நிர்வாக இயக்குநர் எம்.ஏ. சலீம் எனும் பிரபல தொழிலதிபரின் மகள் நவ்ரின் மற்றும் மஞ்சளம்குழி அப்துல்லாவின் திருமணம் திருச்சூரில் உள்ள ஹயாட் ரெசிடென்ஸி நட்சத்திர ஹோட்டலில் சில தினங்களுக்கு முன்னதாக நடைபெற்ற நிலையில், அந்த திருமணத்திற்கும் தனது மனைவி லதா ரஜினிகாந்த் உடன் சென்று மணமக்களை வாழ்த்தினார் ரஜினிகாந்த்.

சரத்குமார், ராதிகா: நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாரும் அந்த திருமணத்திற்கு சென்ற நிலையில், ரஜினிகாந்தை சந்தித்து பேசிய காட்சிகளும் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. மலையாள நடிகர்களான டொவினோ தாமஸ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களும் அந்த திருமண விழாவில் பங்கேற்றனர்.

வேட்டையன் vs கங்குவா: கடந்த ஆண்டு ஜெயிலர் படத்தின் மூலம் விஜய்யின் லியோ படத்துக்கே செம டஃப் கொடுத்த ரஜினிகாந்த் இந்த ஆண்டு சூர்யாவின் கங்குவா படத்துடன் வேட்டையன் படத்தை வெளியிட்டு மோதவுள்ளார். வேட்டையன் ரிலீஸ் தேதி முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் மாற வாய்ப்பில்லை என்றே கூறுகின்றனர். கங்குவா மற்றும் வேட்டையன் படங்கள் மோதினால் ரிசல்ட் எப்படி இருக்கும் என்றும் யாருக்கு மிகப்பெரிய வசூல் வேட்டை அமையும் என்றும் தியேட்டர்கள் ஒதுக்குவதில் பிரச்சனை வெடிக்குமா? என ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளன. சூர்யாவை வைத்து ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் தான் வேட்டையன் படம் உருவாகி உள்ளது என்பது கூடுதல் தகவல்.

கூலி: வேட்டையன் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க காத்திருக்கிறார் ரஜினிகாந்த். இடைப்பட்ட நேரத்தில் பிரபலங்களின் திருமண விழாக்களுக்கும் நோ சொல்லாமல் சென்று வருகிறார் சூப்பர் ஸ்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X