நடிகை மீனா கணவர் வித்யாசாகர் மரணம்.. நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி
சென்னை: நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பு காரணமாக உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக மீனாவின் வீட்டுக்கே வந்து வித்யாசாகரின் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தி உள்ளார்.
Recommended Video
சாஃப்ட்வேர் இன்ஜினியரான வித்யாசாகர் சில காலமாகவே நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.
சமீபத்தில் கொரோனா பாதிப்பும் ஏற்பட்ட நிலையில், அவருடைய உடல் நிலை ரொம்பவே மோசமடைந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில், நுரையீரல் பாதிப்பு காரணமாக தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில், திடீரென சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிர் பிரிந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினிகாந்த் இரங்கல்
குழந்தை பருவம் முதலே நடிகை மீனாவை பார்த்து வரும் ரஜினிகாந்த் வெறும் போன் பண்ணி மட்டும் ஆறுதல் கூறினால் நல்லா இருக்காது, என தனது காரில் புறப்பட்டு மீனாவின் வீட்டுக்கு நேரில் வந்து இரங்கல் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் காரை விட்டு இறங்கி வீட்டுக்கு செல்வதற்குள் ஏகப்பட்ட பேர் அவரை சூழ்ந்து கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது.

மாஸ்க் அணிந்து
70 வயதை கடந்த நடிகர் ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்து உரிய பாதுகாப்புடன் எப்படியாவது மீனாவின் கணவர் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள வேண்டும் என வந்திருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. கூட்டத்தை விலக்கி விட்டு உள்ளே சென்ற நடிகர் ரஜினிகாந்த் வித்யாசாகர் உடலுக்கு மாலை அணிவித்து நடிகை மீனாவுக்கு ஆறுதல் கூறினார்.

கணவர் மரணம்
நடிகை மீனாவின் கணவர் 48 வயதில் உடல் நலக் குறைவு காரணமாக திடீரென உயிரிழந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் தமிழ் சினிமா ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த அதிர்ச்சிகரமான செய்தி அறிந்ததும் நடிகர் ரஜினிகாந்த் போன் செய்து மீனாவுக்கு ஆறுதல் கூறிய நிலையில், தற்போது நேரிலேயே சந்தித்து அஞ்சலி செலுத்தி உள்ளார்.

நடிகை மீனா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக ரஜினிகாந்த் உடன் சில படங்களில் நடித்துள்ளார். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினி அங்கிள் எனக் கூறி நடித்த மீனா எஜமான், முத்து, வீரா உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்தார். கடந்த ஆண்டு வெளியான அண்ணாத்த படத்திலும் ரஜினியின் முறைப் பெண்ணாக நடித்து அசத்தினார்.


Click it and Unblock the Notifications











