பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் மாஸ் என்ட்ரி கொடுத்த ரஜினிகாந்த்.. டிரெண்டாகும் வீடியோ!
சென்னை: பொன்னியின் செல்வன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார்.
வீட்டில் இருந்து அவரது கார் கிளம்பியது முதல் நிகழ்ச்சி நடக்கும் நேரு ஸ்டேடியத்தில் உள்ள அவரது கேரவனுக்கு என்ட்ரி கொடுப்பது வரை ஏகப்பட்ட வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன.
விழா மேடையையும் சற்று முன் ரஜினிகாந்த் அலங்கரித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆடியோ லாஞ்ச் வாரம்
நடிகர் சிம்பு நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி உள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 2ம் தேதி சென்னையில் நடைபெற்றது. ஹெலிகாப்டர் எல்லாம் வைத்து தயாரிப்பாளர் அழைத்தாலும், சிம்பு தனது காரிலேயே நிகழ்ச்சிக்கு வந்தார். அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

இருவரும் இணைந்து
ரஜினி மற்றும் கமல் இணைந்து அந்த நிகழ்ச்சியிலேயே பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் பங்கேற்பார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், விழா மேடைக்கு ரஜினி கருப்பு நிற சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்து கொண்டு வருகை தந்துள்ளார்.

கேரவனில் ஏறும்போது
நடிகர் ரஜினிகாந்தின் கார் செம வேகத்தில் அரங்கத்திற்குள் சீறிப் பாய்ந்தது. போய்ஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் இருந்து புறப்பட்டதில் இருந்து கேரவன் ஏறும் வரையிலான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களீல் ரஜினிகாந்த் ஹாஷ்டேக்குடன் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில், கேரவனில் ரஜினிகாந்த் ரசிகர்களுக்காக செம ஸ்டைலாகவும் எனர்ஜியுடனும் கையசைத்து விட்டு ஏறும் காட்சிகள் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளன.

ஸ்டைல் வணக்கம்
ரசிகர்கள் தெய்வமே என்றும் தலைவா என்றும் சூப்பர்ஸ்டார் என்றும் கோஷம் போட, அவர்களை பார்த்து அழகான அந்த சிரிப்புடன் கையசைத்த ரஜினிகாந்த் தனக்கே உரிய ஸ்டைலில் கெத்தாக வணக்கம் வைத்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஐஸ்வர்யா ராய்க்கு வணக்கம்
விழா மேடைக்கு சென்ற ரஜினிகாந்த் தனது எந்திரன் படத்தின் ஜோடியான ஐஸ்வர்யா ராய்க்கு ஒரு வணக்கம் வைத்து விட்டு, இயக்குநர் மணிரத்னத்தையும் கட்டித் தழுவி விட்டு தனக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் உட்கார்ந்து நிகழ்ச்சியை கண்டு ரசித்து வருகிறார். கமல்ஹாசன் விரைவில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











