சிவகார்த்திகேயன் பரவால போல.. ரஜினிகாந்திடம் வந்து விழுந்த அந்த கேள்வி.. விரலை நீட்டி எச்சரிக்கை!
சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவிக்கு நேர்ந்த கொடுமை குறித்து நடிகர் சிவகார்த்திகேயனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பாதிக்கப்பட்ட மாணவி பக்கம் தான் நிற்க வேண்டும் என்றார். ஆனால், நேற்று கூலி படத்துக்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்துக்கு புறப்பட்டுச் செல்ல வந்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் அந்த கேள்வியை கேட்க விரலை நீட்டி செய்தியாளர்களை எச்சரித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
74 வயதாகும் நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்துக்காக நாடு முழுவதும் பயணம் செய்து ஷூட்டிங் செய்து வந்த நிலையில், தற்போது தாய்லாந்தில் சில முக்கிய காட்சிகளை படமாக்க அங்கே கிளம்பிச் சென்றிருக்கிறார்.

கூலி படத்தின் படப்பிடிப்பு சீக்கிரமே இறுதிக்கட்டத்தை நெருங்கப் போவதாகவும் படம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் பெண்கள் பாதிக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.
அரசியல் கேள்வி கேட்காதீங்க: தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே போகிறதே என்கிற கேள்வியை செய்தியாளர் கேட்ட போது, அரசியல் தொடர்பான கேள்வியை கேட்கக் கூடாதுன்னு ஏற்கனவே சொல்லியிருக்கேன் என விரலை நீட்டி சிரித்துக் கொண்டே எச்சரித்து அந்த நிருபரை அமைதியடைச் செய்துவிட்டு அங்கே இருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார் ரஜினிகாந்த். பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக கருத்து சொல்லிவிட்டு சென்றிருக்கலாமே என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கூலி ஷூட்டிங்: தாய்லாந்தில் வரும் ஜனவரி 13ம் தேதி முதல் 25ம் தேதி வரை படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் இதுவரை 70 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகவும் கூலி படம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த் அரசியல் தொடர்பான கேள்விகளை தவிர்த்துவிட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்து வரும் கூலி படம் இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகி வருகிறது.
1000 கோடி வசூல்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், நடித்து வெளியான லியோ படம் 1000 கோடி வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் 600 கோடி வரை வசூல் செய்தது. இந்நிலையில், கோலிவுட்டின் முதல் 1000 கோடி வசூல் படமாக கூலி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரஜ்னிகாந்த் நடிப்பில் வெளியான லால் சலாம் மற்றும் வேட்டையன் படங்கள் சொதப்பிய நிலையில், கூலி படம் வெயிட்டாக வந்தால் மட்டுமே அதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











