Rajinikanth: பாபா ரீ ரிலீஸில் தியேட்டர் ஆப்ரேட்டர் செய்த தரமான சம்பவம்.. வீடியோவே வேற லெவல்ல இருக்கே

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15இல் ரிலீஸ் ஆன படம் பாபா. இதில் சூப்பர் ஸ்டாருடன், மனிஷா கொய்ரலா, கவுண்டமணி, நம்பியார், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்தனர். படத்தினை பாட்ஷா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். படத்திற்கு ஏ,ஆர், ரகுமான் இசை அமைத்தார். படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவுக்கான வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் படக்குழுவினருக்கு திருப்தி அளிக்கும் அளவுக்கு வசூல் அள்ளிக் கொடுத்தது. இந்நிலையில் இப்படத்தின் ரீ ரிலீஸின் போது தியேட்டரில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

rajinikanth baba re release baba

பாபா திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. படத்தின் கதை மற்றும் திரைக்கதை ஆகியவற்றை ரஜினிகாந்தே எழுதினார். ஏற்கனவே, வீரா, அண்ணாமலை, பாட்ஷா படங்களை இயக்கி வெற்றிப் படமாக கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா, இந்தப் படத்தினை இயக்கினார்.

rajinikanth baba re release baba

பாபா ரீ ரிலீஸ்: கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி, இந்தப் படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. படம் ரீ ரிலீஸிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல் படத்தினை ரீரிலீஸ்க்காக, சிறப்பு எடிட்டிங் செய்யப்பட்டது. மேலும் படத்தில் இடம் பெற்ற பாடல்களும் ரீ மிக்ஸ் செய்யப்பட்டு, டால்பி இசைத் தரத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. அதேபோல், படம் முழுவதும் டிஜிட்டல் தரத்தில் கலர் மிக்ஸிங் செய்யப்பட்டது.

rajinikanth baba re release baba

டிஜிட்டல்: படம் ரீ ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக படத்தினை டிஜிட்டல் முறையில் தரம் உயர்த்தியது ரசிகர்களுக்கு புது எக்ஸ் பீரியன்ஸைக் கொடுத்தது, அதேபோல் படத்தில் இடம் பெற்ற, க்ளைமேக்ஸ் மாற்றி அமைக்கப்பட்டது. பாபா, படத்தைப் பொறுத்தவரை பல்வேறு சுவாரஸ்யமான காட்சிகள் உள்ள படம். அதில் இன்றைக்கும் இணையத்தில் அதிகம் பகிரப்படும் வீடியோக்களில், நண்பர் குறித்தும், மனைவி குறித்தும் ரஜினிகாந்த் பேசும் வசனங்கள் உள்ள காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பைப் பெற்ற காட்சிகள்தான்.

வீடியோ: படத்தின் ரீ ரிலீஸின் போது, படத்தில் இடம் பெற்ற காட்சி ஒன்று வரும்போது, தியேட்டர் ஆப்ரேட்டர் செய்த குறும்பான விஷயம் தொடர்பான சம்பவம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதாவது, பாபா படத்தில் ஒரு படத்தினைப் பார்க்க ரஜினிகாந்த் மற்றும் கவுண்டமணி இருவரும் செல்வார்கள். அப்போது, கவுண்டமணி, 'ஏய் பாபா வருகின்றார் லைட் எல்லாம் போடுங்கடா... ஏய் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுங்கடா' எனக் கூறுகின்றார். அதற்கு ஏற்ற வகையில் படம் திரையிடப்பட்ட தியேட்டரில் இருந்த ஆப்ரேட்டர் லைட்டுகளை ஆன் செய்து ஆஃப் செய்ததால், படம் பார்த்துக் கொண்டு இருந்த ரசிகர்கள் சிரித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இதனைப் பார்த்த இணையவாசிகள் ஆப்ரேட்டருக்கு குசும்புதான் என கமண்ட் அடித்து வருகின்றனர்.

rajinikanth baba re release baba

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X