இயக்குநரிடம் அடி வாங்கிய ரஜினி... தயாரிப்பாளரிடம் அடம் பிடித்ததால் விழுந்த அடி
சென்னை: எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அவர்களுடைய ஆரம்ப காலக்கட்டத்தில் பல பாடங்களை கற்று அவமானங்களை சந்தித்த பின்புதான் முன்னுக்கு வந்திருப்பார்கள்.
அந்த வகையில், இன்று சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்தும் ஆரம்பத்தில் பல அவமானங்களை சந்தித்துள்ளார். ஆனால் அவர் அடி வாங்கிய அனுபவம் தெரியுமா?
ஆம். நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் அடி வாங்கியுள்ளார். வேறு யாரிடமும் இல்லை, தன்னை அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகப்படுத்திய குருநாதர் பாலச்சந்தரிடம்தான்.

அபூர்வ ராகங்கள்
அபூர்வ ராகங்கள் படத்தில் சுருதி பேதம் என்கிற அறிமுக கார்டுடன்தான் ரஜினியை அறிமுகப்படுத்தி இருப்பார் பாலச்சந்தர். சீராக ஒலிக்கும் இசையில் ஒலி தவறி கேட்பதுதான் சுருதி பேதம். அபசகுனமான அறிமுகமாக இருந்தாலும், இன்று தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கிறார் ரஜினி.

அவள் ஒரு தொடர்கதை
அபூர்வ ராகங்களை தொடர்ந்து ஒரு கன்னடப் படத்தில் சிறிய வேடத்தில் நடித்த ரஜினிக்கு அடுத்த வாய்ப்பை கொடுத்ததும் பாலச்சந்தர்தான். அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தபோது அதில் ஜெய் கணேஷ் நடித்திருந்த கதாப்பாத்திரத்தில் ரஜினியை நடிக்க வைத்திருப்பார். அதனை தொடர்ந்து மீண்டும் தமிழில் தான் இயக்கிய மூன்று முடிச்சி திரைப்படத்தில் ரஜினிக்கு முக்கிய கதாப்பாத்திரம் கொடுத்திருப்பார்.

மூன்று முடிச்சு
மூன்று முடிச்சி திரைப்படத்தில் பாலச்சந்தர் ஒப்பந்தம் ஆனபோது, ஆண்ட்டி ஹீரோ கதாப்பாத்திரத்தில் நடிகர் கமலை நடிக்க வைக்கத்தான் தயாரிப்பாளர்கள் அறிவுறித்தியுள்ளனர். ஆனால் அதில் ரஜினியை நடிக்க வைக்கத்தான் பாலச்சந்தர் முடிவு செய்திருந்தாராம். அதனை அறிந்த தயாரிப்பாளர்கள்,"யார் அந்த ரஜினி, அவன் முடியென்ன, முகமென்ன, அவன் பேசும் தமிழென்ன" என்று விமர்சனம் செய்துள்ளனர். ஆனால் பாலச்சந்தரோ ரஜினிதான் நடிக்க வேண்டும். என் மீது நம்பிக்கை வையுங்கள். ஒரு வேளை தப்பாகிவிட்டால், நான் சினிமா துறையை விட்டே போய் விடுகிறேன் என்று அடம்பிடித்து ரஜினியை நடிக்க வைத்துள்ளார்.
Recommended Video

அடி வாங்கிய ரஜினி
கமலை கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்து, ரஜினியை மெய்ன் கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்தார். அப்போது ரஜினி சில காட்சிகளில் சரியாக நடிக்கவில்லை என்றால், வெளியே சொல்ல முடியாத அளவிற்கு பாலச்சந்தர் திட்டுவாராம். திட்டுகளையும் மீறி சில சமயம் அவரிடம் அடியும் வாங்கியிருக்கிறேன் என்று ஒரு மேடை நிகழ்ச்சியில் ரஜினி கூறியிருக்கிறார். அன்று அவர் வாங்கிய திட்டுக்களும் அடிகளும்தான் இன்று அவரை சூப்பர் ஸ்டார் வரை உயர்த்தி இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.


Click it and Unblock the Notifications











