twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கட்சி துவங்குவதற்கு முன்பே முதல்வர் ஆகும் ரஜினி: நாற்காலி ரெடி

    By Siva
    |

    Recommended Video

    கட்சி துவங்குவதற்கு முன்பே முதல்வர் ஆகும் ரஜினி- வீடியோ

    சென்னை: ஏ. ஆர். முருகதாஸ் படத்தில் ரஜினி முதல்வராவது போன்று கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம் நாளை மறுநாள் ரிலீஸாகிறது. இந்த படத்தை அடுத்து அவர் ஏ.ஆர். முருககாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

    இந்நிலையில் படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    2018ம் ஆண்டில் ரசிகர்களை கவர்ந்த நாயகி

    அரசியல்

    அரசியல்

    ரஜினி அரசியலுக்கு வரும் ஐடியாவில் இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் முருகதாஸ் படத்தில் அரசியல் பேசப்போகிறாராம் ரஜினி. ஒரு சாதாரண ஆள் படிப்படியாக முன்னேறி மாநில முதல்வர் ஆவது தான் கதை என்று கூறப்படுகிறது. அந்த முதல்வர் வேறு யாரும் அல்ல நம்ம ரஜினியே தான்.

    ரஜினி

    ரஜினி

    எந்த கட்சி நம்ம கட்சி என்று ரஜினியிடம் கேட்டால் கட்சி எல்லாம் இப்போ நமக்கெதற்கு காலத்தின் கையில் அது இருக்கு என்று கூறி வந்தார். கட்சி ஆரம்பிக்கிறேன் என்று அறிவித்து ஓராண்டு காலம் ஆகியுள்ள நிலையில் முதலில் படத்தில் அரசியல் பேசி முதல்வர் நாற்காலியை பிடிக்கப் போகிறாராம்.

    தலைப்பு

    தலைப்பு

    ரஜினி முதல்வராகும் படத்திற்கு நாற்காலி என்று பெயர் வைக்கலாமா என யோசனையில் உள்ளாராம் முருகதாஸ். படத்திற்கு வேறு பெயர்களையும் தேடிக் கொண்டிருக்கிறாராம். படத்தில் ஒத்திகை பார்த்துவிட்டு நிஜத்தில் முழுவீச்சில் அரசியல் செய்வார் ரஜினி என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தல்

    தேர்தல்

    நாடாளுமன்ற தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் தான் போட்டியிடுகிறது. ரஜினிக்கு இந்த தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை. அதனால் கட்சி துவங்கும் பணியை ஒத்தி வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டாகிவிட்டது. இந்நிலையில் ஒத்தி வைப்பா என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

    English summary
    According to reports, Rajini will act as a politician in his upcoming movie to be directed by AR Murugadoss.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X