அண்ணாத்த டப்பிங் பணிகளைத் துவங்கிய ரஜினிகாந்த்!
சென்னை : சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு ஆகியோர் நடித்து வருகின்றனர்.
பல்வேறு கட்டங்களாக ஹைதராபாத்,சென்னை, கொல்கத்தா ஆகிய இடங்களில் நடைபெற்று வந்த அண்ணாத்த டப்பிங் பணிகளை நடிகர் ரஜினிகாந்த் துவங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பக்கா ஆக்ஷன் படமாக
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறது. பக்கா ஆக்ஷன் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷ்,நயன்தாரா,மீனா, குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர்.

கொரோனா காரணமாக
தொடர்ந்து ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாகவும் ரஜினிகாந்தின் உடல்நிலை காரணமாகவும் சில காலம் நடைபெறாமல் இருந்தது.இப்பொழுது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் எடுக்க இருந்த பல காட்சிகளை அங்கு செல்லும் சூழ்நிலை இல்லாததால் சென்னையிலேயே எடுத்து முடித்துள்ளது படக்குழு.

சென்னையில் படமாக்க
அதிலும் சில காட்சிகளை கொல்கத்தாவில் படமாக்க இருப்பதாக படக்குழு தெரிவித்திருந்தது ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் அதுவும் சாத்தியமில்லை என்பதால் சென்னையில் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். இருப்பினும் மீண்டும் கொல்கத்தா சென்று படப்பிடிப்பை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் துவங்கினார்
இந்த நிலையில் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை துவங்கி உள்ளார் என தெரியவந்துள்ளது. மயிலாப்பூரில் உள்ள கிராக் ஸ்டுடியோவில் தான் அண்ணாத்த டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறதாம். ஏற்கனவே பல அப்டேட்களை வெளியிட்டுள்ள அண்ணாத்த படக்குழு ஆகஸ்ட் மாதம் மற்றுமொரு முக்கிய அப்டேட்டையும் வெளியிட உள்ளது. மேலும் தீபாவளியை முன்னிட்டு இப்படம் ரிலீஸாக இருப்பதால் நவம்பர் 4ஆம் தேதி அண்ணாத்த வெளியாக வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications











