யாரு கிட்ட பைக் ஸ்டன்ட்.. ஓடுற பைக்ல ரஜினிகாந்த் என்னவேலை எல்லாம் பண்றாரு பாருங்க.. தெறி மாஸ்!
சென்னை: லியோ படத்தில் இடம்பெற்ற பைக் ஸ்டன்ட் காட்சி மற்றும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், நடிகர் விஜய்யின் பைக் ஸ்டன்ட் காட்சிகள் பற்றி விஜய் ரசிகர்கள் ஏகப்பட்ட பதிவுகளை போட்டு கொண்டாடி வரும் நிலையில், ரஜினிகாந்த் ரசிகர்கள் தம்பி எங்க கிட்டேயும் பைக் ஸ்டன்ட் காட்சி இருக்கு என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் த்ரோபேக் வீடியோ ஒன்றை வெளியிட்டு மாஸ் காட்டி வருகின்றனர்.
விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே போட்டி நிலவி வந்த நிலையில், கடந்த ஆண்டு சூப்பர்ஸ்டார் பட்டத்தில் ஆரம்பித்து, காக்கா - கழுகு மோதல் என உச்சக்கட்டத்தையே தொட்டு விட்டது.

டபுள் ட்ரீட் இருக்கு: இந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் இருக்கு. பொங்கலுக்கு லால் சலாம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொஞ்சம் தாமதமாகி அந்த படம் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு வேட்டையன் படமும் வெளியாகி விடும் என்பதால் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான். மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் 171வது படம் இந்த ஆண்டு ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு தீபாவளி அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லியோ பைக் ஸ்டன்ட்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான லியோ படத்தில் ஜார்ஜ் மரியத்தை பைக் பின்னாடி உட்கார வைத்து விஜய் செய்யும் பைக் ஸ்டன்ட் காட்சி சாலையில் எடுக்கப்படவில்லை என்றும் சிஜியில் ஒரு ரூமுக்குள் எடுக்கப்பட்ட காட்சி என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தற்போது ரஜினி ரசிகர்கள் எங்க ஆள் அந்த காலத்தில் செய்த ஸ்டன்ட் காட்சியை பார்த்து இருக்கீங்களா என வீடியோ ஒன்றை வெளியிட்டு தெறிக்கவிட்டுள்ளனர்.

ரியல் பேடாஸ்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புல்லட் பைக்கை ஓட்டிக் கொண்டே சிகரெட் பிடிப்பது, ஒரு கையை விட்டு ஸ்டன்ட் செய்வது என வண்டி ஓட்டிக் கொண்டே நிகழ்த்தும் சாதனை வீடியோவை வெளியிட்டு ரசிகர்கள் "Bike stunt பத்தி ஏதோ சொன்னியே என்ன சொன்ன !?? பரவால்ல சொல்லுடா ! The Real Badass" என போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











