Rajinikanth: டெய்லியும் அந்தத் தப்பைச் செய்வேன்.. மனைவி வந்த பின் எல்லாம் மாறுச்சு.. ரஜினி ஓபன்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கின்றார். மூத்த நடிகர் என்றபோதும் இன்றைக்கும் மார்க்கெட்டில் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டு இருக்கின்றார். ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்தில் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்த ரஜினிகாந்த், இன்றைக்கு தொழில்நுட்பத்தின் உச்சத்தில் இருக்கும்போது, மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கின்றார் என்றால், அவரது உழைப்புதான் காரணம். பலருக்கும் இன்றைக்கு உத்வேகமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது ஆரம்ப காலகட்டத்தில் பொறுப்பற்ற வாழ்க்கையை வாழ்ந்ததாக பல மேடைகளில் கூறியுள்ளார். அப்படியான ஒரு சம்பவம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தே மிகவும் ஓப்பனாக பேசிய விஷயங்கள் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

Rajinikanth Rajinikanth Birthday Rajinikanth Wife Latha

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகின்றார். இது இவரது 171வது படம் ஆகும். இதுமட்டும் இல்லாமல், அடுத்த ஆண்டில் ஜெயிலர் 2 படத்திலும் நடிக்கவுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக வந்து வாழ்க்கையைத் தொடங்கவில்லை என்றாலும், அவரது ஸ்டைல் மற்றும் முயற்சியினால் கதாநாயகனாக மாறினார். மேலும் கதாநாயகனாக மாறி வெற்றிகளைக் கொடுத்துக் கொண்டு இப்போதுவரை இருக்கின்றார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் ரிலீஸ் ஆகின்றது என்றாலே பல முன்னணி நடிகர்கள் தங்களின் படங்களின் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துக் கொள்கின்றனர்.

Rajinikanth Rajinikanth Birthday Rajinikanth Wife Latha

ரஜினி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்டக்டராக இருந்து தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். அப்போது அவருக்கு இருந்த கெட்டப் பழக்கம் என்றால் அது தினமும் வேலை முடிந்த பின்னர் மது அருந்துவது. இதனை தினமும் செய்து வந்தவர், சினிமாவில் வந்த பின்னரும் செய்துகொண்டு இருந்திருக்கின்றார். ஒருமுறை இயக்குநர் பாலச்சந்தர் இயக்கத்தில் நடித்தபோது, படப்பிடிப்பு முடிந்த பின்னர், ஹோட்டலில் வந்து மது அருந்திவிட்டு இருந்துள்ளார். அதன் பின்னர், பாலச்சந்தர் கூப்பிட்டுவிட, குளித்துவிட்டு, மது அருந்திய வாடை தெரியக்கூடாது என பாலச்சந்தர் அருகிலேயே போகாமல் இருந்துள்ளார்.

Rajinikanth Rajinikanth Birthday Rajinikanth Wife Latha

மது: இதனைக் கண்டுபிடித்த பாலச்சந்தர், ரஜினிகாந்தை மிகவும் கோபத்தோடு திட்டியுள்ளார். இது தொடர்பாக ரஜினியே பேசியுள்ளார். அதேபோல் மற்றொரு நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், " எனது வாழ்க்கையில் லதாவை எனக்கு அறிமுகம் செய்துவைத்த ஒய்.ஜி. மகேந்திரனுக்கு நன்றி. அவருக்கு நான் ரொம்பவும் கடமைப்பட்டுள்ளேன். நான் நடத்துனராக இருந்தபோது, தினமும் மது அருந்துவேன். ஒரு நாளைக்கு நான் எவ்வளவுமுறை புகைபிடிப்பேன் என கணக்கே இல்லை. தினமும் இரண்டுமுறையாவது அசைவ உணவு சாப்பிடுவேன். ஆனால் இவை மூன்றும் உடல்நலத்திற்கு கேடு ஏற்படுத்துபவை.

Rajinikanth Rajinikanth Birthday Rajinikanth Wife Latha

மனைவி லதா: இந்த மூன்றையும் தினமும் எடுத்துக் கொள்ளும் மனிதர்கள் 60வயதுக்கு மேல் வாழமாட்டார்கள். எனது மனைவிதான் என்னை மாற்றினார். அவரது அன்புதான் நான் புகைப்பிடிப்பதை நிறுத்த காரணமாக அமைந்தது. அவரது பாசத்தினால்தான் நான் மது அருந்துவதை தவிர்த்தேன். நீங்களும் (ரசிகர்களும்) புகைப்பிடிப்பதை, மது அருந்துவதை விட்டுவிடுங்கள்" என பேசினார். இவரது இந்தப் பேச்சு இப்போதும் ரஜினி ரசிகர்கள் பலரது வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

Rajinikanth Rajinikanth Birthday Rajinikanth Wife Latha

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X