ரஜினிகாந்துக்கு எந்த ஈகோவும் இல்லை.. கோமாளி படத்தில் சூப்பர் ஸ்டாரை கலாய்த்த பிரதீப்.. இன்னைக்கு?
சென்னை: கோமாளி படத்தில் "நான் அரசியலுக்கு வருவது உறுதி" என டிவியில் ரஜினிகாந்த் பேசும் வீடியோவை காட்டி இது 2016 வருஷம் என யோகி பாபு சொல்வார். பல வருடங்களாக கோமாவில் இருந்த ஜெயம் ரவி, "யாரை ஏமாத்த பார்க்குற இது 1996" என பேசும் வசனம் இடம்பெற்றிருக்கும். அந்த ஒரு காட்சியை படத்தில் இருந்து நீக்கும் அளவுக்கு சர்ச்சை வெடித்தது.
கமல்ஹாசனே போன் செய்து ஐசரி கணேஷிடம் பேச, மன்னிப்புக் கேட்டு பிரதீப் ரங்கநாதனும் ஐசரி கணேஷும் ரஜினிகாந்தை படத்தில் கிண்டல் செய்த காட்சியை நீக்கினர். சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் வருவதற்கு முன்பாக விஜய், யுவன் சங்கர் ராஜா, ரஜினிகாந்த் என பல பிரபலங்கள் குறித்து இஷ்டத்துக்கு பிரதீப் ரங்கநாதன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட ஸ்க்ரீன் ஷாட்டுகளை எல்லாம் ஷேர் செய்து சோஷியல் மீடியாவில் லவ் டுடே படம் ஹிட்டான பிறகு போட்டு வெளுத்தனர்.

சமீபத்தில் வெளியான டிராகன் படம் 100 கோடி வசூலை ஈட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்ற பின்னரும் சிலர் அதனை ஷேர் செய்து வருகின்றனர். இந்நிலையில், எந்தவொரு ஈகோவும் இல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஷ்வத் மாரிமுத்துவை தனது வீட்டில் அழைத்து வாழ்த்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாழ்க்கை ஒரு வட்டம் பிரதீப் என அட்வைஸ் செய்து வருகின்றனர்.
ரஜினி ரசிகர்களுக்கு பிடிக்காது: அடுத்த தனுஷ் போல வளர்ந்து வரும் பிரதீப் ரங்கநாதனை ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவே பிடிக்காது. அதற்கு காரணம் கோமாளி படத்தில் அவர் செய்த மோசமான விஷயம் தான். காமெடி காட்சிக்காக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரை படத்தில் அசிங்கப்படுத்தும் அளவுக்கு போகலாமா? என பிரதீப் ரங்கநாதனை போட்டு பொளந்து வந்த ரஜினி ரசிகர்கள் ரஜினிகாந்தை சந்தித்து பிரதீப் ரங்கநாதன் ஆசி பெற்ற நிலையில், இதுதான் எங்க தலைவர் என கமெண்ட் போட்டு சூப்பர் ஸ்டாரின் பரந்த மனசை பாராட்டி வருகின்றனர்.
பிரதீப்பை வாழ்த்திய ரஜினி: ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், கெளதம் மேனன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படம் 100 கோடி வசூலை ஈட்டிய நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் ஆசிர்வாதம் வாங்கியுள்ளனர். பிரதீப் ரங்கநாதன் ரஜினிகாந்தை சந்தித்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஈகோ இல்லாத மனிதர்: கமல்ஹாசன் சினிமாவில் போட்டியாக இருந்தாலும் தனது திரையுலக அண்ணன் என்றும் ஹேராம் படத்தை பலமுறை பார்த்து வியந்தேன் என்றும் பேசும் ரஜினிகாந்த், லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் தன்னையும் விஜய்யையும் கோர்த்துவிட்டு தப்புத் தப்பாக பேசாதீங்கப்பா என வெளிப்படையாகவே அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில், பிரதீப் ரங்கநாதனுக்கும் ஆசி வழங்கியுள்ள ரஜினிகாந்தை பார்த்த ரசிகர்கள் அவர் ஒரு ஈகோ இல்லாத மனிதர் என பாராட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவில் வெற்றி பெறும் இயக்குநர்களும், ஹீரோக்களும் தலைவரை சந்திக்கத்தான் காத்திருக்கின்றனர் என்றும் என்றுமே அவர் தான் உச்ச நட்சத்திரம் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











