நவராத்திரி நாளில் ரஜினியிடம் ஆசி பெற்ற ராகவா லாரன்ஸ்

Recommended Video

ரஜினி விளம்பரத்தில் நடிக்கவுள்ளாரா?.. மனைவி ஓபன் டாக் | Latha RajiniKanth Exclusive

சென்னை: நவராத்திரி நிறைவு நாளான நேற்று நடிகர் ராகவா லாரன்ஸ் தனது தலைவனான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இல்லத்திற்கு சென்று சந்தித்தார். ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் என இருவரிடமும் ஆசீர்வாதம் பெற்றார் ராகவா லாரன்ஸ்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மீது ராகவா லாரன்ஸ் கொண்டுள்ள அன்பு, மரியாதை, பக்தி இவை அனைத்தும் ஊர் அறிந்த செய்தி. லாரன்ஸ் இன்று ஒரு நடிகர், நடன கலைஞர், இயக்குனர் என லாரன்ஸிசின் பல திறமையான முகங்களை வெளிக்கொண்டு வந்ததற்கு முக்கிய காரணமாக இருந்து அவரின் வாழ்க்கையை உயர்த்தியவர் ரஜினி காந்த் தான்.

Rajinikanth Blessed Raghava Lawrence on the eve of Navaratri Festival

அந்த நன்றி கடன் மற்றும் மரியாதை அந்த மகா ரசிகனிடம் மிகுதியாகவே உள்ளது. ரஜினிகாந்த் அவர்களை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு தனக்கு வாழ்க்கையளித்த அந்த மாமனிதனின் பல கொள்கைகளை லாரன்ஸும் பின்பன்றி வருகிறார்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் போல் தன்னை முழுமையாக ராகவேந்திரா ஸ்வாமிக்காக அர்ப்பணித்து தன்னுடைய பெயரில் ராகவா என்று சேர்த்துக் கொண்டார். அந்த பக்தியின் காரணமாக ராகவேந்திரர் ஸ்வாமி பிருந்தாவனம் என கோயில் ஒன்றை சென்னை ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயல் பகுதியில் கட்டியுள்ளார்.

மேலும் ரஜினிகாந்த்தின் பிரபலமான பாடலான அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்ற பாடலுக்கு இணங்க தனது தாய் மீது மிகுந்த அன்பும், பாசமும் மரியாதையும் உடையவர் லாரன்ஸ். அது மட்டுமின்றி ராகவா லாரன்ஸ் சமுதாயத்திற்கு பல வகைகளில் சேவை புரிந்து வருகிறார். சென்னையில் 2017ஆம் ஆண்டு மெரீனா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அவரின் பங்கு இன்றியமையாதது. இது போன்ற பல சமூக நல பணிகளை சிறப்பிக்க செய்து வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றின எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதில் முன் நிற்பது ராகவா லாரன்ஸாகத்தான் இருக்கும். அவருக்கு எல்லாமே அவரது தலைவன் ரஜினிகாந்த் என்பது ஊர் அறிந்த விஷயம்.

நவராத்திரி நிறைவு நாளான நேற்று நடிகர் ராகவா லாரன்ஸ் தனது தலைவனான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இல்லத்திற்கு சென்று சந்தித்தார். ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் என இருவரிடமும் ஆசீர்வாதம் பெற்றார் ராகவா லாரன்ஸ். இவர்கள் இருவரின் இடையே இருக்கும் உறவு குரு பக்திக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X